மிகமிக சாதாரணமான நாம் தஞ்சாவூர் நாடாளுமன்ற
தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து இன்னும் முழுமையாக நம்மக்களை சென்றடையாத
நிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக தமிழகத்தை ஆண்ட ஒரு பெரும்கட்சியின் தலைமை
(அறிவிற்க்கு கோவில் அமைத்த) நம்மை தொடர்புக்கொள்ளவும், நம்முடைய ஒத்துழைப்பை
பெறவும் முயற்சி எடுத்திருக்கிறது, யார் நம்மை இதுநாள் வரை புறக்கணித்தார்களோ...?
அவர்களே நம்மை நாடிவருவது, நம் சாதிக்கு கிடைத்த ஒரு அங்கிகாரம் என்பதைவிட நம்
சாதியின் வலிமையை யாரெல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்கள், எந்த இடத்தில் நம் சாதி
பலவீனமாக இருக்கிறது என்பதை நன்றாக உணர முடிகிறது, இதுபோன்ற தருணங்களில் நம்
இனத்தின் சிலரால் வழக்கமாக நாம் சந்தித்த "துரோகங்கள்" நிறைய…
அதே நேரத்தில் எம் சாதி மக்களுக்கு "இளம் சிங்கங்களின்
எழுச்சி இயக்கம்" அளிக்கும் ஒரு
உத்ரவாதம், "உயிர்போனாலும் அஞ்சோம்,
ஒரு போதும் விலைபோக மாட்டோம்"
என்பதே... எங்கள் நோக்கத்தை கொண்டு சேர்ப்பதில்
சிறியவர்கள்தாம் நாங்கள், ஆனால் எங்கள் நோக்கம் சிறிதல்ல...!! அரசியல் அதிகாரம்
மட்டும்தான் இந்த சாதி இதுவரை இழந்த அனைத்து
உரிமைகளையும் மீட்டெடுக்க ஒரெ வழி என்பதில் நாம் தெளிவாகவே இருக்கிறோம்…!! அந்த
அரசியல் அதிகாரத்தை பெரும் விழிப்புணர்வை ஒவ்வொரு முத்தரையனின் மனதில் உருவாக்கும்
வரை நாம் பின்வாங்குவதில்லை..! யாரிடமும் அடிபணிவதும் இல்லை...!! யார் அவர்
எவ்வளவு உயரத்தில் இருப்பவராக இருந்தாலும், இன்னும் சிலர் சட்டத்தை காட்டி அச்சுறுத்தினாலும்,
நாம் பின்வாங்குவதில்லை என்பதை எம் உறவுகளுக்கு உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த நேரத்தில் முத்தரையர் சமூகத்தின் அறிவில் சிறந்த ஆன்றோர்களால் புதிதாக
தொடங்கப்பட்டுள்ள அரசியல் இயக்கமான "புதிய பூமி" இயக்கம் நமக்கு நிபந்தனையற்ற ஆதரவை தந்திருக்கிறது, இதே
போன்ற நிலைப்பாட்டை முத்தரையர் சமுதாயத்தை மையமாக கொண்டு செயல்படும் அனைத்து
இயக்கங்களும் எடுக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்..
நம்முடைய நோக்கம் மிக உயரத்தில் உள்ளவர்கள் வரை எட்டிய இந்த தருணத்தில், இன்னும்
வேகமாக உற்சாகமாகவே களத்தில் இருக்கிறோம், உறவுகள் உங்களின் ஒத்துழைப்பும்
இருக்கும் பட்சத்தில் இன்னும் வேகமாக நம் இலக்கை அடைய முடியும் என்பதை உறுதியோடு
அறிவித்துக்கொள்கிறோம்... !!
உறவுகளின் ஆதரவை
உரிமையுடன் வேண்டி...
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
தலைமை
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின்
எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக