கடந்த 2009 லோக்சபா
தேர்தலில், தமிழகத்தில், ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றவருக்கும், அவருக்கு
அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தவருக்கும் இடையேயான வாக்கு
வித்தியாசம் 3 சதவீத புள்ளிகளுக்கும் குறைவாக இருந்தது. அந்த தேர்தலில் இரண்டு
பலமான அணிகள் மோதியே இந்த நிலை ஏற்பட்டது. இந்த முறை, ஐந்து முனை போட்டி என்பதால்,
இந்த ஏழு தொகுதிகளில் என்ன நடக்குமோ என, கோடிகளை கொட்டும் கட்சிகளும்,
வேட்பாளர்களும் திகிலோடு தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
கடந்த முறை,
அ.தி.மு.க., கூட்டணி, மூன்று தொகுதிகளில், 1 சதவீத புள்ளிக்கும் குறைவான வாக்கு
வித்தியாசத்திலும், ஏழு தொகுதிகளில் 4 சதவீத புள்ளிகளுக்கும் குறைவான வாக்கு
வித்தியாசத்திலும் தோல்வி அடைந்தது. இந்த முறை, பா.ஜ., கூட்டணி அ.தி.மு.க.,
வாக்குகளை பிரிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதால், இந்த தொகுதிகளில், தி.மு.க.,
ஜெயித்துவிடுமா என்ற கேள்வி, ஒரு தரப்பு அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்து
உள்ளது. நேரடியாக அப்படி கணிக்க முடியாது என்றும், அந்தந்த தொகுதியில் தற்போது
உள்ள நிலவரத்தை பொறுத்தே வெற்றி, தோல்வி முடிவாகும் எனவும், இன்னொரு தரப்பு
அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
திருச்சி:
கடந்த முறை காங்.,
மற்றும் அ.தி.மு.க., சார்பில் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்கள் களம்
இறக்கப்பட்டனர். இவர்கள் அந்த சமூகத்தின் ஓட்டுகளை இரண்டாக பிரித்தனர். இங்கு
முத்தரையர் ஓட்டுகளும் பெரும் அளவில் உள்ளன. அ.தி.மு.க., வேட்பாளர் முத்தரையர்
ஓட்டுகளை சற்றே அதிகம் பெற்றதால், வெற்றி கிடைத்தது. இந்த முறை, தி.மு.க., -
அ.தி.மு.க., - காங்., முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்களையே களம் இறக்கி உள்ளன.
அதனால், இந்த முறையும் முத்தரையர் ஓட்டுகள் தான் வெற்றி, தோல்வியை முடிவு
செய்யும்.
News Source : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக