தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் "நமது மக்கள் கட்சியின்"
வேட்பாளரை ஆதரிக்க "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" முடிவு..
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் " நமது மக்கள் கட்சியின்"
வேட்பாளர் திரு.மும்மூர்த்தி (எ) எஸ்.எம்.மூர்த்தி அவர்களை ஆதரிக்க "இளம் சிங்கங்களின்
எழுச்சி இயக்கம்" உறவுகளின் வேண்டுகோளுக்கினங்க தீர்மானித்துள்ளது.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரும்பாண்மை சமூகமாக "முத்தரையர்கள்"
இருந்தும், அரசியல்கட்சிகள் தொடர்ந்து துரோகம் செய்வதை கண்டித்து நேரிடையாக மக்களிடையே
விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் நாமே களமிறங்குவது என்று தீர்மானித்து
"முத்தரையர் ஓட்டு முத்தரையருக்கே" என்ற கோசத்தை முன்வைத்து நமது வேட்பாளராக
திரு. தேவா (எ) சுரேஷ் அம்பலக்காரரை வேட்பாளராக அறிவித்தோம், திட்டமிட்ட சதியினால்
நம் வேட்பாளரின் மனு நிராகரிப்பட்டதினால் அடுத்து என்ன செய்வது ? என்று பலகட்ட ஆலோசனைகளுக்கும்
பிறகு நமது மக்கள் கட்சியின் வேட்பாளரும், ஒரெ ஒரு முத்தரையர் வேட்பாளருமான திரு.மும்மூர்த்தி
(எ) எஸ்.எம்.மூர்த்தி அவர்களை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறோம்..
ஏன் அவரை ஆதரிக்கிறோம் என்பதற்க்கான காரணங்கள் :-
1. மூன்று கள்ளர் சமூகத்தவரும், இரண்டு அகமுடையார் (எ) தேவர் சமூகத்தவரும்
பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக இருக்கும் தஞ்சை தொகுதியில் ஒரெ ஒரு
"முத்தரையர்" வேட்பாளர் என்பதினாலும்.
2. விழிப்புணர்வு பெற்ற நம் மக்களின் ஓட்டுக்களை சிதையாமல் பெற வேண்டியது,
நம்முடைய எதிர்கால அரசியல் வெற்றிக்கு அவசியம் என்பதாலும்.
3. நாம் முன்னிருத்திய அதே கோரிக்கைகளான "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு"
தஞ்சாவூரில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல நேரடியான களப்போராட்டங்களை
நடத்தியவர் என்பதாலும்.
4. நம் இனத்தின் காவலராய் இருந்த அய்யா ஆலங்குடி A.வெங்கடாசலனார் படுகொலை
செய்யப்பட்டபோது குற்றவாளிகளின் அச்சுறுத்தல்களை மீறி பல போராட்டங்களையும் நடத்திய
ஒரெ தலைவர் என்ற முறையிலும்.
5. நம்மைவிட சமூதாய பணியில், வயதில், அனுபவத்தில் மூத்தவர் என்பதாலும்.
6. கொள்ளைகாரர்கள், கொலைகாரர்கள், ஊழல் பணத்திற்க்கு பினாமியாக இருப்பவர்கள் எல்லாம் தேர்தலில் நிற்க்கும்போது இவர்மீது சுமத்தப்படும்
குற்றசாட்டுகள், சில நமது உறவுகளுக்கு இருக்கும் வருத்தங்கள் எல்லாம் கடந்து
"முத்தரையர்களின் " இருப்பை வெளிப்படுத்த வேண்டியது இந்த தேர்தலில் மிகவும்
அவசியம் என்பதாலும்.
7. நேரடியாக நம்மை வந்து சந்தித்து அவருக்கு ஆதரவு தர வேண்டும் என்று
கேட்டுக்கொண்டதாலும்.
இந்த தேர்தலில் நமது மக்கள் கட்சியின் வேட்பாளராக, "பேட்ஸ்மேன்" சின்னத்தில் போட்டியிடும் திரு. மும்மூர்த்தி (எ) எஸ்.எம்.மூர்த்தி அவர்களை உறவுகள், இனத்தின்பால் அக்கறை கொண்டவர்களின்
வேண்டுகோளுக்கினங்க ஆதரிக்கிறோம்.
- இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக