செவ்வாய், 8 ஏப்ரல், 2014

மீண்டும் ஒரு விளக்கம்...!



மீண்டும் ஒரு விளக்கம்...!
 சதியின் காரணமாக நம்முடைய வேட்புமனு நிராகரிப்பட்டது என்று நேற்று பதிவிட்டிருந்தோம், இருந்தாலும் இன்னும் சிலருக்கு சந்தேகங்கள் தீரவில்லை, நடந்த நிகழ்வுகளையும், ஆதாரங்களையும் தருகிறோம். இது நம்மீது குற்றம் சாட்டுபவர்களுக்கு போதுமான விளக்கமாக இருக்கும் என்று நம்புகிறோம்

03.04.2014 
இன்று வேட்புமனுவும் அதனுடன் உறுதிமொழி பத்திரமும் (affidavit) தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சிதலைவருமான திரு. சுப்பையன் அவர்களிடம் கொடுக்கப்பட்டது, அப்பொழுதே வேட்புமனுவையும், உறுதிமொழி பத்திரத்தையும் சரி பார்த்து உறுதிமொழி பத்திரத்தில் சில எழுத்துப்பிழைகள் இருப்பதாக சுட்டிக்காட்டி 05.04.2014 மாலை 3.00 மணிக்கு முன்பாக சரி செய்து புதிதாக தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். (இந்த சுட்டியில் CLICK  முதலில் தாக்கல் செய்யப்பட்ட உறுதிமொழி பத்திரம் இருக்கிறது ) 

04.04.2014
தேர்தல் அதிகாரி சுட்டிகாட்டிய தவறுகள் திருத்தப்பட்டு, நான்கு வெவ்வேறு வழக்கறிஞர்களிடம் காண்பித்து சரி என்று சொன்ன பிறகு, நோட்டரி பப்ளிகின் முன்னிலையில் கையொப்பம் இடப்பட்டு மனு தாயார் செய்யப்பட்டது. (இங்கு நோட்டரி பப்ளிக்கூட தவறை கவனிக்கவோ / சுட்டிக்காட்டவோ இல்லை என்பதுதான் ஆகப்பெரிய வேதனை..)

05.04.2014
வேறு ஒரு வழக்கறிஞர் முன்னிலையில் மதியம் 02.00 மணிக்கு உறுதிமொழி பத்திரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது, இந்த முறை உறுதிமொழி பத்திரத்தை அதிகாரிகள் சரிபார்க்கவோ, வேறு எதேனும் தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டவோ இல்லை, இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்ட உறுதிமொழி பத்திரத்தினை இணையதளத்தில் பதிவேற்றமும் செய்யவில்லை, பெற்றுக்கொண்டதாக மட்டும் Acknowledgment (copy attached) தந்தார்கள். (இந்த இடத்தை நன்றாக கவனிக்கவும் : நமது உறுதிமொழி பத்திரம் சரிபார்க்கவே இல்லை) 


07.04.2014
மனுக்கள் பரீசிலனையின் போது நமது மனுவை நிராகரிப்பதாக ஆட்சியர் சொன்னபோது நாம் வழக்கறிஞர் மூலம் கடுமையான ஆட்சேபனையினை முன்வைத்தும் நம் மனுவை நிராகரிப்பதிலேயே குறியாக இருந்தார்கள், இறுதியாக மனு நிராகரிக்கப்பட்டதாக சொன்னபோது தேர்தல் அதிகாரியிடம் எழுத்துமூலம் நிராகரித்ததற்க்கான காரணத்தை எழுதி வாங்கிகொண்டோம் (இணைக்கப்பட்டது), அதில் மனுவில் உள்ள குறை "சுட்டிக்காட்டப்பட்டும் திருத்தப்படவில்லை" என்று எழுதி தந்திருக்கிறார்கள், இந்த இடத்தில்தான் நாம் சந்தேகப்பட வேண்டி இருக்கிறது. 
முதல் உறுதிமொழிபத்திரத்தில் எதுவெல்லாம் குறையாக சுட்டிக்காட்டப்பட்டதோ அது அனைத்தும் திருத்தப்பட்டுவிட்டது, இரண்டாவதாக தாக்கல் செய்த உறுதிமொழிபத்திரம் சரிபார்க்கவோ, தவறு சுட்டிக்காட்டப்படவோ இல்லை,(இதில் இரண்டு வரிகள் அடிக்கப்படவே (Typing Error) இல்லை..! இதை நான்கு வழக்கறிஞர்களும் கவனிக்கவே இல்லை) ஆனால் நம்மிடம் எழுதி கொடுக்கும்போது "தவறு சுட்டிக்காட்டப்பட்டும் திருத்தப்படவில்லை"  என்று எழுதி தந்துள்ளார்கள்.

இதனை வழக்காக தொடுக்க முடியுமா ? என்று ஆலோசித்தபோது இரண்டு விசயங்கள் முன் வைக்கப்படுகிறது, 

1.      இபோது வழக்கு தொடுத்தால் தேர்தல் முடிந்த பிறகு மட்டுமே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

2.      அதிக பொருட்செலவு ஏற்படும். (தீர்ப்பு வந்தாலும் நமக்கு ஒரு பலனும் இல்லை, வெறும் கண்டனம் மட்டுமே தெரிவிப்பார்கள்)
(வழக்காடும் அளவிற்க்கு நாங்கள் பொருள் படைத்தவர்கள் இல்லை, அய்யா திரு.கமலநாதன் போன்ற வழக்கறிஞர்கள் இந்த வழக்கை நடத்திக்கொடுக்க முடியும் என்றால் நம் தரப்பு நியாயங்களை / ஆதாரங்களை அவரிடம் சமர்பிக்க தயார்)

தவறு சுட்டிக்காட்டி இருந்தால் அதனை கையாலேயே திருத்தி இருக்க முடியும், ஆனால் தவறு சுட்டிக்காட்டப்படாமலே, காட்டப்பட்டதாக சொன்னதன் காரணமாகவும், நம்முடைய மனுவை போலவே மொத்தம் 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதும், "இது திட்டமிட்ட செயலோ" என்று சந்தேகிக்க வைக்கிறது.

என்ன இருந்தாலும் தவறுக்கு நாமும் பொறுப்புதான், அதனால்தான் நாம் "தார்மீக பொறுப்பை" ஏற்றுக்கொள்கிறோம்.  

-          இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

*** சந்தேகத்தோடு கேள்வி எழுப்புபவர்கள் நம்முடைய தம்பிகளோ, நம்மோடு களப்பணியாற்றிய உறவுகளோ, இணையத்தளத்தில் உழைத்தவர்களோ, பொருளாதார ரீதியாக உதவியவர்களோ இல்லை(இவர்கள் இல்லாமல் நாம் தனித்து எதுவும் செய்துவிடவும் இல்லை), நம்முடைய வீழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கும் சில "நல்லவர்கள்" எழுப்பும் கேள்விகள். 

 இந்த விளக்கம்கூட நம்மீது நம்பிக்கை கொண்ட, எங்களைவிட அதிகமாக களப்பணியாற்றிய, உணர்வாய் உழைத்திட்ட தம்பிகளில் யாருக்கும் நம்முடைய நேர்மை மீது சிறுதுளி அளவுகூட நம்பிக்கையின்மை வந்துவிடக்கூடாது என்பதற்க்காகதான், எனக்கு ஆறுதல் சொல்லும் தம்பிகளும், உறவுகளும் ஒருபக்கம், எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் நிற்க்கும் நான் ஒரு பக்கம். இப்போது கற்றுக்கொண்ட பாடத்தின் மூலம் இனி ஒரு காலத்திலும் இந்த தவறுகள் நம் தரப்பில் ஏற்பட்டுவிடாது என்பதை தாண்டி சொல்வதற்க்கு நம்மிடம் வேறு ஒன்றும் இல்லை... :(

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக