மறவாதீர்கள்...
நாளை நமது நாள் உறவுகளே...! அரசியலில் ஒதுக்கப்பட்டு,
ஒடுக்கப்பட்டு ஆண்டாண்டுகளாய் வாழ்ந்தது போதும்.. விழித்துக்கொள்வோம், கிடைத்த வாய்ப்பை
சரியாக பயன்படுத்த தெரியாவிட்டால் இனி ஒருபோதும் வீழ்ந்து கிடக்கும் நாம் வெற்றியை
நினைத்துப்பார்க்கும் தகுதியை கூட பெற மாட்டோம்.. இது நமக்கான நாள்.. நம் சமூகத்திற்க்கான
நாள்
பெரம்பலூரில் - உதயசூரியன் (அல்லது) இரட்டை இலை
திருச்சி - தொலைக்காட்சி பெட்டி (அல்லது) விளக்குமாரு
தஞ்சாவூர் - மட்டை வீச்சாளர்
சிவகங்கை - விசில்
மதுரை - தேங்காய் மூடி
விருதுநகர் - காஸ் சிலிண்டர்
இதுதான், இவ்வளவுதான் நமது சின்னங்கள், நம் தாய், தந்தை, சகோதரன், சகோதரி,
மாமா, அத்தை, தாத்தா, பாட்டி என்று இருக்கும் அத்தனை உறவுகளிடமும் வாக்கு சாவடிக்கு
போகும் முன்பாக உறுதியாக எடுத்துச் சொல்லுங்கள், இதுதான் இவ்வளவுதான் நமது சின்னங்கள்,
அனத்து வேலைகளையும் ஒதுக்கி வையுங்கள், நாளை ஒரு நாள் நம் சமுதாயத்திற்க்காக உழையுங்கள்,
வெற்றி நமதே என்பதை நிமிடம் தோறும் நினைவில் நிறுத்துங்கள், பொய்யான வாக்குறுதிகள்,
ஓட்டுக்கு பணம், கவர்ச்சியான பேச்சுக்கள் எல்லாமே வேசம், நமக்கென ஒன்றுமே இல்லை, யார்
பிரதமர் ஆனாலும் நமக்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்,
இப்பொழுது நடப்பதெல்லாம் நாடகமே... ! உணர்ந்து கொள்வோம், ஒன்றிணைவோம்.
"முத்தரையர் ஓட்டு முத்தரையருக்கே"
-இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக