ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம்
ஆலங்குடி அடுத்த வடகாட்டைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம். அவர் அ.தி.மு.க.,
சார்பிலும் சுயேச்சையாகவும் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாகி, அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாகவும், எதிர்கட்சி எம்.எல்.ஏ.,வாகவும் இருந்து சட்டசபையிலும்,
தொகுதியிலும் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2010 அக்., 7ம் தேதி மாலை அவர் வீட்டிலிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். அவர் வழக்கில் சிலர் தாங்கள்தான் கொலை செய்தோம் என்று நீதிமன்றத்தில் ஆஜராகி சிறைக்குச் சென்று சில மாதங்கள் இருந்து விட்டு இப்போது வெளியில் வந்து விட்டனர். யார் தான் உண்மையான குற்றவாளி? என்று இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் வெங்கடாசலம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அக்., ஏழாம் தேதி குழு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதில் அனைத்து கட்சியினரும் திரளாக கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.

வரும் அக்டோபர் மாதம் ஏழாம் தேதி
நடக்க இருக்கும் குருபூஜை அன்று அவரது முழு உருவச்சிலை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அதற்காக சிலை அமைப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக்குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சரும், ஆலங்குடி எம்.எல்.ஏ.,வுமான கு.ப.கிருஷ்ணனை, அப்பகுதி மக்களும் வெங்கடாசலத்தின் உறவினர்களும், ஆதரவாளர்களும் தேர்வு செய்துள்ளனர். அக்குழுவில் உறுப்பினர்களாக பலரைச் சேர்த்து சிலை அமைக்கும் பணியும் துவங்கி உள்ளது. வெங்கடாசலம் சிலைக்காக ரூ.ஒரு லட்சம் கு.ப.கிருஷ்ணன் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News Source : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக