அரியலூர்: அரியலூர் அருகே,
சட்ட விரோதமாக தனியாருக்கு பட்டா போடப்பட்ட பொது நிலத்தை மீட்டு, பொதுமக்கள் உபயோகத்துக்கு
வழங்க முன்வராத அரசு அதிகாரிகளைக் கண்டித்து, கருவிடச்சேரி கிராம மக்கள் அனைவரும் தமது
கட்சி மற்றும் ஜாதியை மறந்து, ஒட்டு மொத்தமாக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ளது கருவிடச்சேரி கிராமம்.
இக்கிராமத்தில் மூன்றரை ஏக்கர் புறம்போக்கு நிலம் இருந்தது. திருச்சி-சிதம்பரம் தேசிய
நெடுஞ்சாலை அருகே, சரளை குவாரியாக இருந்த மேற்கண்ட புறம்போக்கு நிலத்தை, பொய்யூர் கிராமத்தை
சேர்ந்த வி.ஏ.ஓ., மணிவேல் மகன் கலைவாணன், ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த வளர்மதி,
கருப்பிலாக்கட்டளை கிராமத்தை சேர்ந்த குஞ்சம்மாள், பொய்யூர் கிராமத்தை சேர்ந்த கன்னியாகுமரி
உள்ளிட்ட நான்கு பேர் பெயருக்கு, 2011 ஜூலை 18ம் தேதி இலவச பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த கிராம மக்கள் மேற்கண்ட இடத்துக்கான பட்டாவை ரத்து செய்து, அந்த நிலத்தை கருவிடச்சேரி கிராம மக்களின், பொது பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அரியலூர் கலெக்டர் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மனு கொடுத்தனர்.
இதையறிந்த கிராம மக்கள் மேற்கண்ட இடத்துக்கான பட்டாவை ரத்து செய்து, அந்த நிலத்தை கருவிடச்சேரி கிராம மக்களின், பொது பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அரியலூர் கலெக்டர் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மனு கொடுத்தனர்.
நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
இதனால் ஆவேசமடைந்த கருவிடச்சேரி கிராம மக்கள், மேற்கண்ட நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளாத,
அரசு அதிகாரிகளை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு செய்ய போவதாக கடந்த மாதம் அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று சிதம்பரம் லோக்சபா தொகுதிக்காக, கருவிடச்சேரி
கிராமத்தில் உள்ள பஞ்., யூனியன், நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்ட ( 90-ம் எண்) ஓட்டு
சாவடியில், தலைமை தேர்தல் அலுவலர் அன்பு செல்வன் தலைமையில் அருணா, புஷ்பவல்லி, குமரேசன்
உள்ளிட்டோர் தேர்தல் அலுவலர்களாக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையுள்ள ஓட்டுப்பதிவுக்கான நேரத்தில், கருவிடச்சேரி
கிராமத்தில் வசிக்கும் முத்தரையர், யாதவர், தலித் உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்த,
475 ஆண் வாக்காளர், 460 பெண் வாக்காளர் உள்பட, 935 வாக்காளர்களும், ஒட்டு மொத்தமாக,
ஓட்டுப்போட ஓட்டுச்சாவடிக்கு செல்லாமல், தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.
பொது பிரச்சனைக்காக கருவிடச்சேரி கிராம மக்கள், தமது கட்சி மற்றும் ஜாதியை மறந்து,
ஒட்டு மொத்தமாக நடத்திய தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கை, சிதம்பரம் லோக்சபா தொகுதியில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News Source : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக