தஞ்சாவூர்,
தஞ்சை பாராளுமன்ற
தொகுதி நமது மக்கள் கட்சி வேட்பாளர் எஸ்.மும்மூர்த்தி என்கிற எஸ்.எம்.மூர்த்தி
பேராவூரணி அருகே கே.ஆர்.புரத்தில் வாக்கு சேகரித்து பேசினார்.அப்போது அவர்
பேசியதாவது:– என்னை வெற்றிபெற செய்தால் அடிதட்டு மக்களுக்கு உதவுவேன். கூலி
தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பட தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும்
தீர்க்க பாடுபடுவேன். மேலும் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் ஆதரவுடன்
போட்டியிடும் எனக்கு மட்டை வீச்சாளர் சின்னத்தில் வாக்கு அளித்து பெருவாரியான
வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
News Source : DINATHANTHI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக