மதுரை,
தமிழ்நாடு
முத்தரையர் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம் தல்லாகுளத்தில் உள்ள சங்க
அலுவலகத்தில் நடந்தது. வக்கீல் பாண்டிப் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில மற்றும்
மாவட்ட நிர்வாகிகள் பெரியகருப்பன், கண்ணன், திரவியம், பிருதிவிராஜ், மலையன் உள்பட பலர்
கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
தமிழர்களின்
வீரவிளையாட்டான ஜல்லிகட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையினை மறு பரிசீலனை
செய்ய வேண்டும். சூதாட்டமாக நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய வேண்டும்.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை சுயேட்சை
வேட்பாளர்களுக்கு மறுக்கும் நடவடிக்கையை தேர்தல் கமிஷன் கைவிட வேண்டும்.
தமிழகத்தில் அதிகரித்துள்ள கொலை, கொள்ளை மற்றும் வன்முறைகளை தடுக்க உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும். வருகிற 23–ந்தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள்
கொண்டாடப்படும். மேலும் அவருக்கு மணி மண்டபம் அமைப்பதுடன் மாவட்டம் தோறும் அரசு
தரப்பில் சிலை நிறுவ வேண்டும்.
மேற்கண்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
News Source : DINATHANTHI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக