திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்வராஜ் தனது பிறந்த நாள்
விழாவை கொண்டாடினார்.
செல்வராஜ் பிறந்த நாள் விழா
திருச்சி தி.மு.க முன்னாள் அமைச்சரும், தி.மு.க தலைமை செயற்குழு
உறுப்பினருமான என்.செல்வராஜ் தனது பிறந்த நாள் விழாவை எளிமையாக கொண்டாடினார்.
பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து அன்பில் தர்மலிங்கம் சிலை,
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கும் மாலை அணிவித்தார்.
பிரமுகர்கள் வாழ்த்து
விழாவில் தி.மு.க. வெளியீட்டு செயலாளர் என். செல்வேந்திரன்,
திருச்சி சிவா எம்.பி, தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ரெங்கையன், தலைமை செயற்குழு
உறுப்பினர் எம்.ஆர். புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் எரகுடி சங்கர், ஜே.கே.
சண்முகம், துறையூர் நகர செயலாளர் மகாராஜன், ஒன்றிய செயலாளர்கள் முசிறி சோழன், மண்ணச்சநல்லூர்
ஆனந்தன், குளித்தலை சந்திரன், பிச்சை முத்து, இளம்தென்றல் மோகன், கைக்குடி சாமி,
முன்னாள் சேர்மன் துரைராஜ், திருச்சி நகர முன்னாள் துணை செயலாளர் மாமணன், முன்னாள்
ஒன்றிய செயலாளர் தொட்டியம் ரத்தினம், சூர்யா சிவா, திருத்திய மலை மனோகரன்,
பாலப்பட்டி குமார், சுக்காம்பட்டி சின்னதுரை, சமயபுரம் செல்வராஜ், மாவட்ட
பிரதிநிதி சித்தன், காடுவெட்டி தங்கவேல், துறையூர் அசோகன், தொழில் அதிபர்கள்
வீகேயென் கண்ணப்பன், சித்ரா பாரிவள்ளல், ஜோதீஸ் கிருஷ்ணன் கொணலை செல்வம்,
இளையராஜா, முத்துச்செல்வம், லால்குடி சங்கர் தாயனூர் சேகர் உள்பட ஏராளமானோர்
கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
News Source : DINATHANTHI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக