திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்க, திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் சிவராஜ் தலைமையில் நடந்தது. சங்கர் வரவேற்றார். கூட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் யாத்திரை நிவாஸ், வண்ணத்து பூச்சி பூங்கா, கம்பரசம் பேட்டையில் தடுப்பணை, தோட்டக்கலை, தேசிய சட்டப்பள்ளி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், திருச்சி மாநகராட்சி துணை மேயராக முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தவறாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 83 உயர் அதிகாரிகளை, உச்சநீதிமன்ற உத்தரவுபடி டிஸ்மிஸ் செய்ய வேண்டும். முத்தரையர் சங்க மாநில உயர்மட்ட பிரதிநிதிகள் மாநாட்டை. திருச்சி நடத்துதல். மாநாட்டுக்கு மீனவர் ஐக்கிய முன்னணி, வேட்டுவ கவுண்டர் பேரவை, ஊராளி கவுண்டர் பேரவை நிர்வாகிகளை அழைப்பது, அம்மா மருந்தகத்தில் இருதய நோய், ரத்த அழுத்தம், ரத்தசோகை, சிறுநீரக கல் போன்ற நோய்களுக்கு, பாதி விலையில் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுத்தல் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
News Source : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக