வெள்ளி, 11 ஜூலை, 2014

நக்கீரனின் விசமம்...!



நக்கீரனின் விசமம்...!



ஒரு மஞ்சள் பத்திரிக்கைக்கு இருக்க வேண்டிய அத்தனை தகுதிகளையும் (!) தாங்கி வாரமிருமுறை பொய்யையும், புரட்டையும் சுமந்து வெளிவரும், 2G ஊழலில் வளர்ந்த " ந‌க்கீரன்" 2014 ஜூலை 09-11 இதழில் "ஜாலி ரேப் - கரூர் பயங்கரம்" என்ற தலைப்பில் அவசியமே இல்லாமல் முத்தரையர்களை வம்பில் இழுத்துவிட்டிருக்கிறது, நக்கீரனின் திருச்சி பகுதி நிருபராய் பகுதி நேரமும், ஊழல் அரசியல்வாதிகளின் முழு நேர எடுபிடியாகவும் இருக்கும் ஜெ.டி.ஆர் எழுத்தில் விசமத்தை புகுத்தி எழுதியிருக்கும் இந்த கட்டூரை நக்கீரனின் விசமத்தனத்தை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த மாணவி வினிதா பாலியல் வல்லுறவிற்க்கு பிறகு கொலை செய்யப்பட்டதற்க்கும், குளித்தலையை அடுத்த பரளியை சேர்ந்த வேறு ஒரு மாணவி பாலியல் வல்லுறவிற்க்கு ஆளனதற்க்கும், இந்த பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு எந்த தொடர்பும் இல்லாமல் "முத்துராஜா" சமூகம் குறித்து தனது விசமத்தை பதிவு செய்திருக்கிறது, 

மாணவி வினிதா மீதான பாலியல் வல்லுறவில் / கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது இதுவரை காவல்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை, அந்த மாணவி சார்ந்த அதே சமூகத்தை சேர்ந்தவர்கள் உட்பட பலரிடமும் விசாரணை நடந்து வருகிறது என்றே இதுவரை காவல்துறை அறிவித்துள்ளது, இந்நிலையில் சம்பவம் நடந்த பிச்சம்பட்டியில் அன்றைய தினம் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்ததாம், அன்று "முத்துராஜா"க்களின் மண்டகாபடியாம், அதனால் ரோட்டில் ஜனநடமாட்டம் அதிகம் இருக்கும் என்ற தைரியத்தில் தனது மகளை வேலைக்கு அனுப்பியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சொல்லியிருக்கிறார்" இதுவரை சரியான பாதையில் சென்ற எழுத்து அடுத்த வரியில் திசை மாறுகிறது, (காண்க படம்) சரி முத்துராஜாக்கள் மண்டகாபடிக்கும் நடந்த சம்பவத்திற்க்கும் என்ன சம்பந்தம்..? வேண்டுமென்றே எங்கள் சாதியின் பெயரை இணைத்து இந்த கட்டூரை எழுதியதன் மூலம் ஒட்டுமொத்தமாக "முத்துராஜா"க்கள்தான் இந்த தவறை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் எழுதி தனது அறிப்பை தீர்த்துக்கொண்டுள்ளது " நக்கீரன்" இந்த குற்ற செயலில் ஈடுபட்டது யாராக இருந்தாலும், ஏன் நான் சார்ந்த முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் பொது இடத்தில் தூக்கிட்டு கொல்லப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் சமூகத்தின் நிலைப்பாடாக இருக்கிறது, அதற்காக ஆதரமற்ற, பொய்யையும், புரட்டையும் எழுதி விசமத்தை, சாதிய வன்முறைக்கு வித்திடும் இதுபோன்ற கட்டூரைகளை தொடர்ந்து நக்கீரன் எழுதுமேயானால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்று எச்சரிக்கிறோம்.

-சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக