கல்வி பரிசளிப்பு விழா
02.08.2014 அன்று பட்டுக்கோட்டை குட்டாள் திருமண
மண்டபத்தில் "சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை" சார்பாக "முத்தரையர்"
இன மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டாக கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில் பத்தாம் வகுப்பு
மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுதேர்வில்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு
பாராட்டும், பரிசுகளும், ஊக்கதொகையும் வழங்கப்பட்டது. விழா கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது,
தொடர்ந்து சன்டீவி புகழ் அண்ணா. சிங்காரவேலு தலைமையில் ""சாதாரண மாணவனை சாதனையாளனாக
ஆக்குவது குடும்ப சூழலா..? சமூக சூழலா..?” என்ற தலைப்பின்கீழ் பட்டிமன்றமும் நடைபெற்றது,
பின்னர் கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்க்கு ஓய்வு பெற்ற
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் எஸ். சுந்தரமூர்த்தி
தலைமை தாங்கினார், திரு. கே. சஞ்சய்காந்தி
அம்பலக்காரர் வரவேற்புரையாற்றினார். விழாவில் சுவரன்மாறன் கல்வி அறக்கட்டளையின் புதிய
பொறுப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது, விழாவில் அரசியல் கட்சி பிரமுகர்களும்,
முத்தரையர் சமுதாய முன்னோடிகளும் , பெண்கள்,
மாணவர்கள் என பெரும்பாலானவர்கள் கலந்து
கொண்டனர் முடிவில் திரு. அரங்கசாமி அவர்கள்
நன்றியுரை வழங்கினார்.
கல்வி பரிசளிப்பு
விழா ஏற்பாடுகளை அறக்கட்டளையின் ஒருங்கிணப்பாளர் திரு. எம்.எஸ்.அன்பரசன் அவர்களால் செய்யப்பட்டது, இதில் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க நண்பர்கள் சார்பாக பரிசுகள்
வழங்கப்பட்டது, விழாவிற்கான ஏற்பாடுகளிலும் முழுமையான பங்களிப்பினை செய்திருந்தார்கள்.
சுவரன் மாறன்
கல்வி
அறக்கட்டளையின்
புதிய
பொறுப்பாளர்கள்
:
தலைவர் :
திரு.
கே. சஞ்சய்காந்தி அம்பலக்காரர், பழஞ்சூர்
செயலாளர் :
திரு.அரங்கசாமி, வெட்டிக்காடு
பொருளாளர் :
திரு.
எம். தமிழரசன், கரிசைவயல்
ஒருங்கிணைப்பாளர்
:
திரு.
எம்.எஸ். அன்பரசன் எம்.காம், பி.எட்.,
அதிராம்பட்டினம்
ஆகியோர்
பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்கள்.
இங்கனம்
சுவரன் மாறன்
கல்வி
அறக்கட்டளை
பட்டுக்கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக