இது ஏதோ ஒரு ஊர்தானே என்று ஒதுங்கி போய்விட முடியாது.., காரணம் இது “முத்தரையர் “கோட்டை இந்த தொகுதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராய் இருந்து இன்று பதவிபோய் சிறையில் இருக்கும் செல்வி. ஜெயலலிதா வெற்றி பெற்ற சட்டமன்ற தொகுதி இதுதான், ஒருமுறை விட்டுகொடுத்தோம் என்பதற்காக இது நம்முடைய தொகுயில்லாமல் போய்விடாது.
அவர் வேட்பாளராக இருந்தபோது எதிர்த்து போட்டியிட்டவர் திமுக சார்பில் நின்ற ஆனந்த் எனும் “முத்தரையர்” என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருப்பீர்கள், இன்று இந்த தொகுதி காலியாக இருப்பதாக சட்டமன்ற செயலகம் அறிவித்துள்ளது ஆகவே விரைவில் இடைத்தேர்தல் வர இருக்கும் முத்தரையர் கோட்டையில் திமுகவாகட்டும், அதிமுகவாகட்டும் அல்லது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் யார் வேட்பாளரை அறிவித்தாலும் அது முத்தரையராகவே இருக்க வேண்டும்..! அதனை உறுதிபடுத்த வேண்டியது அந்த அந்த கட்சியில் இருக்கும் முத்தரையர்களின் கடமை, உங்களால் முடியாத பட்சத்தில் விலகி நின்று வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும்.
முத்தரையர் யார் வேட்பாளராக இருந்தாலும் அவர்தான் வெற்றி பெற வேண்டும், காரணம் இது முழுமையான முத்தரையர் தொகுதி நீங்கள் யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருந்துக்கொள்ளுங்கள் , முத்தரையராக இருக்கும் நீங்கள் என்ன செய்வீர்களோ, எப்படி பெருவீர்களோ தெரியாது இந்த தொகுதியை உங்கள் கட்சிகளிடமிருந்து பெற்று வாருங்கள், இந்த தேர்தல்களத்தில் முத்தரையர் சமுதாய சங்கங்கள் நின்று நிதானமாக முடிவினை எடுத்து "முத்தரையர்களை" மட்டுமே ஆதரிக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள், இது முத்தரையர் பலம் காண்பிக்க வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து இப்போதே தேர்தலுக்கு தயாராவோம், எதிரி யார் ? துரோகி யார் ? என்பதையெல்லாம் போகும்வழியில் பார்த்துக்கொள்வோம், வரப்போகும் இடைத்தேர்தல் முத்தரையர்களின் அரசியல் எழுச்சிக்கு அடையாளமாக இருக்க வேண்டும். விரைவில் ஸ்ரீரங்கம் தொகுதியில் முத்தரையர் இளைஞர்களின் ஆலோசனை கூட்டத்தினை நடத்திடுவோம்.
இணைவோம் உணர்வாய்...
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
1 கருத்து:
appadiyellaam vidamudiyaathu--pragadeesh adangaatha ambalakkarar sangam
கருத்துரையிடுக