வில்லியனூர், : புதுச்சேரி முத்தரையர்பாளையம் முத்தரையர்மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் கல்விக்கண்காட்சி நடந்தது. பள்ளி முதல்வர் முத்துராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைமுதல்வர் அனந்தசயனம், தாளாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, டவுன் பிளானிங் சேர்மன் கேஎஸ்பி ரமேஷ் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் அறிவியல் படைப்புகளை வைத்திருந்தனர். இதனை மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு பார்வையிட்டனர். பள்ளி நிர்வாக அதிகாரி நாராயணசாமி நன்றி கூறினார்.
News Source : DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக