பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது திருமதி.கனிமொழியிடம் கையளித்த கோரிக்கை கடிதம் :
அனுப்புதல் :
K. சஞ்சய்காந்தி அம்பலக்காரர் (M.B.A.,)
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
பழஞ்சூர் (அஞ்சல்)
பட்டுக்கோட்டை தாலுகா
தஞ்சாவூர் மாவட்டம்
பெறுதல் :
திருமதி. கனிமொழி (நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்)
மாநில மகளிர் அணி செயலாளர்,
திராவிட முன்னேற்ற கழகம்
சமீபத்திய தமிழ் செய்திஏடுகளில் "முத்தரையர்" சமூகம் குறித்த தங்களின் அக்கறையை செய்தியாக வெளியிட்டு வருகின்றன, தங்களின் அக்கறை உண்மையாகவே இருக்கும் என்றே நம்புகிறேன், அதற்க்காக எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.
தமிழகத்தின் முதுபெரும் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தில் "முத்தரையர்" சமூகத்திற்க்கு உரிய பிரதிநிதிதுவம் தரப்படுவதில்லை என்பதுதான் எங்களுக்கு வருத்தமே தவிர வேறு முரண்பாடுகள் இல்லை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு.கலைஞர் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியில் நிரம்ப வாழும் "முத்தரையர்" சமூகத்திற்க்கு என்ன காரணத்தினாலோ தொடர்ந்து வாய்ப்புக்கள் வழங்கப்படாமலே இருக்கிறது.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக போட்டியிட்ட 119 தொகுதிகளில் "முத்தரையர்களுக்கு" வாய்பளித்தது நான்கே தொகுதிகளில்தான் (1. குளித்தலை திரு.இரா.மாணிக்கம் 2. மண்ணச்சநல்லூர் திரு. என்.செல்வராஜ் 3. மேலூர் திருமதி. ராணி ராஜாமாணிக்கம் 4. சீரங்கம் திரு.என்.ஆனந்த்) அதாவது திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களும், மதுரை மாவட்டத்தில் ஒரு இடமும் அதாவது திமுக போட்டியிட்டதில் வெறும் ஒரு சதவீதத்திற்க்கும் குறைவான இடங்களிலேயே வாய்பளிக்கப்பட்டது.
அதேபோல முத்தரையர் சமுதாயம் அறுதி பெரும்பாண்மையாக இருக்கும் தொகுதிகளான 1. ஒரத்தநாடு 2. கந்தர்வகோட்டை (தனி) 3. தஞ்சாவூர் 4. திருவையாறு 5. துறையூர் (தனி) 6. நத்தம் 7. புதுக்கோட்டை 8. மன்னார்குடி 9. விராலிமலை 10. வேதாரண்யம் 11. மணப்பாறை 12. இலால்குடி 13. திருப்பத்தூர் (சிவகங்கை) 14. திருமங்கலம் 15. திருச்சி-1 16. திருச்சி-2 போன்ற தொகுதிகளிலாகட்டும்
அதேபோல கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட 1.ஆலங்குடி (பாமக) 2. சிவகங்கை (காங்கிரஸ்) 3. பட்டுக்கோட்டை (காங்கிரஸ்) 4. பேராவூரணி (காங்கிரஸ்) 5. முசிறி (காங்கிரஸ்) 6. திருத்துறைபூண்டி (காங்கிரஸ்) 7. திருமயம் (காங்கிரஸ்) 8. அறந்தாங்கி (காங்கிரஸ்) 9. காரைக்குடி (காங்கிரஸ்) 10. சோழவந்தான் (பாமக) 11. விருதுநகர் (காங்கிரஸ்) 12. இராமநாதபுரம் (காங்கிரஸ்)
(இதில் காங்கிரஸ் மற்றும் பாமக தலா ஒரு இடத்தில் வாய்பளித்து இருக்கிறது)
மேலே சொல்லியிருக்கும் பட்டியலானது அறுதி பெரும்பாண்மை சமூகமாக "முத்தரையர்கள்" வாழும் தொகுதிகள், இதைதவிர வெற்றி தோல்வியை நிர்ணயிக்ககூடிய சக்தியாக காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தனி, வேலூர், கரூர், திருவெறும்பூர், பெரம்பலூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களிலும் வாய்பளிக்கப்படுவதில்லை.
குறிப்பாக முத்தரையர்கள் அதிகம் வாழும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு "தள்ளி" விட்டுவிடுவதன் மூலம் திராவிட முன்னேற்ற கழகம் எங்கள் மக்களின் கவனத்தை பெற முடியாமல் இருக்கிறது, இந்த நிலை மாற வேண்டுமானால் வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் மேலே அறுதி பெரும்பாண்மை என்று குறிப்பிட்டு எழுதப்பட்டு இருக்கும் 32 தொகுதிகளில் (தனி தொகுதிகள் தவிர்த்து) கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல் திராவிட முன்னேற்ற கழகமே "முத்தரையரை" வேட்பாளராக அறிவிக்குமேயானால் "பகிரங்கமாகவே" நாங்கள் உள்ளிட்ட எங்கள் சமூகத்தின் அனைத்து அமைப்புக்களின் ஆதரவையும், மக்களின் ஆதரவையும் பெற உழைப்போம் என்று உறுதியளிக்கிறேன்.
அதேபோல எங்கள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1340-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்க்கு திமுக சார்பில் தாங்கள் வருகின்ற மே 23 ஆம் நாள் திருச்சி மாநகருக்கு வருகைதந்து எங்கள் பேரரசருக்கு மரியாதை செலுத்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
தங்கள்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
நாள் :
இடம்