தஞ்சை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் யார் பெரும்பாண்மை...?
குறிப்பாக பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு தொகுதிகளில் உண்மையிலேயே எந்த சமூகம்தான் பெரும்பாண்மை..? இந்த தொகுதிகளுக்கு தொடர்பற்றவர்கள் தொடங்கி, மொத்த தொகுதிகளிலும் சில தெருக்களில் வாழ்பவர்கள் வரை, நாங்கள் பெரும்பாண்மை, நாங்கள்தான் பெரும்பாண்மை என்று சொல்கிறார்களே அது உண்மைதானா..?
தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை ஊழல் பணத்திலும், ஊரை ஏமாற்றிய பணத்திலும் மஞ்சள் குளிப்பவர்களின் ஆதிக்கத்தில்தான் மொத்த மாவட்டமும் இருக்கிறது, அவர்களின் மனசாட்சிக்கு தெரியும் எந்த சமூகம் உண்மையில் பெரும்பாணமையானது என்று. முத்தரையர் மக்களிடம் பொருளாதாரம் இல்லை, அதாவது இவர்களுக்கு ஊரை ஏமாற்றி கொள்ளையடிக்க தெரியாது, இதனால் இவர்களுக்கு அரசியலில் அவ்வளவு ஈர்ப்பு கிடையாது, அதனாலையே அரசியல் கட்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பும் கிடையாது,
நிச்சயமாக இங்கு அரசியல் செய்பவர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் நிதர்சனமாக தெரியும் முத்தரையர் மக்களின் எண்ணிக்கை பலம் பற்றி..! பேராவூரணி தொகுதியை மட்டும் எப்படி எல்லோரும் முத்தரையர் மக்கள்தான் பெரும்பாண்மை என்று சொல்கிறார்கள் ? காரணம் 1972 ஆம் ஆண்டிலேயே "தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின்" சிங்கம் சின்னத்தில் நின்று வென்றார் திரு.குழ.செல்லையா (அதிமுக தொடங்கிய காலத்தில் எம்.ஜி.ஆருடன் இருந்த ஐந்து எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர்) அதனுடைய தாக்கம்தான் இன்றும் அந்த தொகுதியை மட்டும் மற்றவர்கள் வெறுப்பாக "முத்தரையர்" மட்டுமே பெரும்பாண்மை என்று ஒத்துக்கொள்ள வைக்கிறது, பேராவூரணி முத்தரையனுக்கு இருந்த சூடும், சுரணையும் ஏனைய தொகுதி முத்தரையனுக்கும் வரும்போது பொய்யுரைப்பவர்களின் காலம் முற்றுபெறும்.
யாருக்கெல்லாம் முத்தரையர் மக்கள்தான் பெரும்பாண்மை என்று நிறுபிக்க வேண்டுமோ அவர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கைதான் தொகுதிக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் ஐந்து தொகுதிகளுக்கும் ஐந்து கோடி ரூபாயை யாராவது கடனாக கொடுங்கள் அடுத்து எப்படியும் நிலையற்ற ஆட்சி அமையும்போது ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அதுவும் முத்தரையர் சட்டமன்ற உறுப்பினர்களை தஞ்சை மாவட்டத்தில் இருந்து தருகிறோம். மற்றபடி திரும்ப திரும்ப நாங்கள் பெரும்பாண்மை, நாங்கள்தான் பெரும்பாண்மை என்று கத்தி, கதறுபவர்கள் தொடர்ந்து அதையே செய்யுங்கள்..!
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக