புதன், 1 ஜூலை, 2015

முத்தரையர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்





தஞ்சை,: முத்தரையர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி முத்தரையர் சமூக நீதி பேரியக்கம் சார்பில் தஞ்சையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தஞ்சை ரயில்வே ஸ்டேசன் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முத்தரையர் சங்க கொள்கை பரப்பு செயலாளர் வீரைய்யா தலைமை வகித்தார். இந்திய தேசிய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அருணாச்சலம், திருக்குறள் அரசுக் கழகம் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்க பொதுச் செயலாளர் மூர்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். 

கல்வி,வேலைவாய்ப்பு, அரசியல் என்று அனைத்து துறைகளிலும் முத்தரையர் இனத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தனித் தொகுதி வழங்க வேண்டும். மத்திய அரசுபணியில் 10 சதவீதமும், மாநில அரசு பணியில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு மசோதவை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முத்தரையர் சங்க பொதுச்செயலாளர் சின்னையா, அமைப்பாளர் செல்வராஜ், இளம் சிங்க ஒருங்கிணைப்பாளர் சஞ்சய்காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கோபி நன்றி கூறினார்.

News Source : DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக