புதன், 1 ஜூலை, 2015

தனி இடஒதுக்கீடே ஒரே தீர்வு..! முத்தரையர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

தனி இடஒதுக்கீடே ஒரே தீர்வு..!

இன்று தஞ்சை மாநகரில் கொழுத்தும் வெயிலில் எங்கள் சமூகத்தின் உரிமைக்காக இளைஞர்கள் பட்டாளம் ஒன்று வீதியில் நின்று போரடியது.., இனியும் போராடும்....!!!

எங்களுக்கான உரிமையை வென்றேடுக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது, இன்று கூடிய கூட்டத்திற்க்கு எந்த ஆதாய நோக்கமுமில்லை, ஒருவேளை இடஒதுக்கீடு கிடைத்தால் இவர்களில் எத்தனைபேர் அனுபவிப்பார்கள் என்றும் உறுதிகூற முடியாது, ஆனாலும் போராடுகிறோம் எங்கள் சமூகத்திற்காக...!!

மத்திய அரசும், மாநில அரசும் எங்கள் சமூகத்திற்க்கு தனி இடஒதுக்கீட்டை தர வேண்டும், மேலும் எங்கள் எண்ணிக்கைகேற்ப 30 தனித்தொகுதிகள் ஒதுக்க வேண்டும் இதையே கோரிக்கையாக வைத்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் ஆர்பாட்டம் ஒன்றினை தஞ்சை ரயிலடியில் நூற்றுக்கணக்கான "முத்தரையர் இளம் சிங்கங்கள்" ஒன்றுகூடி திரு. எஸ்.எம்.மூர்த்தி தலைமையில் நடத்தி முடிந்திருக்கிறார்கள், இதன் அடுத்தகட்டமாக டெல்லியில் போராடுவது என்றும் முடிவெடுத்து இருக்கிறார்கள், வியர்வை வழிய ஒரு கடமையுள்ள சமூக போராளியாக நானும் களத்தில் நிற்க்கும்போது பெருமிதமாகவே இருக்கிறது, மற்றபடி இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடுவிக்காடு, முசிறி உறவுகளின் தியாக மனப்பான்மை ஏனைய முத்தரையர்களுக்கும் வரவேண்டும் மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட  திரு. மகேந்திரன், திரு.இளவழகன் துணைச்செயலாளர், திரு.பாலமுருகன், திரு.தீபக்,  திரு.அப்பு, திரு.பிரகாஷ், நெய்வாசல் அருண், திரு.செந்தில் உள்ளிட்ட இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத் தோழர்களுக்கும், நட்பிற்க்காக, சமுதாயத்திற்காக கலந்துகொண்ட திரு.அன்பு, செயலாளர், சிங்க ராஜாக்கள் கட்சி மற்றும் திரு. நாஞ்சிக்கோட்டை சசிகுமார் உள்ளிட்ட உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

தனி இட ஒதுக்கீடு, இந்த இலக்கை அடைவதே இனி முத்தரையர்களின் வாழ்வாதாரத்திற்க்கு ஒரேவழி, ஒன்று திரண்டால் முடியாதது எதுவும் இல்லை...! திரள்வோம், வெல்வோம்..!!!

சஞ்சய்காந்தி அம்பலக்காரர், 
ஒருங்கிணைப்பாளர், 
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக