காரைக்குடி: இலவச பொருட்கள் வழங்காததால் அதிமுக எம்.பி, எம்.எல்.ஏவை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட் டம், காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கு தமிழக அரசின் இலவச பொருட்கள் வழங்கும் துவக்க விழா நேற்று நடந்தது. செந்தில்நாதன் எம்.பி., சோழன் சித.பழனிச்சாமி எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் கற்பகம்இளங்கோ, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக 25 பேருக்கு இலவச பொருட்களை வழங்க முடிவு செய்தனர். இவர்களில் 4 பயனாளிகளுக்கு மட்டும் இலவச பொருட்களை கொடுத்து விட்டு எம்.பி மற்றும் எம்.எல்.ஏ உள்ளிட்டநிர்வாகிகள் மேடையை விட்டு கீழே இறங்கினர். அதிர்ச்சியடைந்த முத்தரையர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் எம்.பி செந்தில்நாதனையும், எம்.எல்.ஏ சோழன் சித.பழனிச்சாமியையும் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். ரேஷன் கார்டை சரி பார்த்து நாளை (இன்று) இலவசப்பொருட்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News Source : DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக