தமிழக அரசே எங்கள் சமூகத்திற்க்கு பங்கு (!) கொடு.....!!!
மதுரை எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழக மாநாடு
பொதுவாக எல்லா சாதியும் இடஒதுக்கீடு கொடு, நீதி கொடு என்றுதான் கேட்பார்கள், ஆனால் நாம் வித்தியாசமானவர்கள் இல்லையா..? அதனால்தான் "பங்கு" கொடு என்று கேட்கிறோம்.அதற்க்கு விளக்கம் பிறகு சொல்கிறேன்,
சிவகங்கை தொடங்கி தென்மாவட்டங்களில் அரசியல்படுத்தப்படாத ஒரே ஒரு இனம் "முத்தரையர்" இனம், அந்த இனத்திற்க்கு அய்யா ஆண்டியப்பனுக்கு பிறகு ஒரு தகுதியான தலைவரை இன்றும் தேடுகிறார்கள், நாளையும் தேடுவார்கள் என்றே கருதுகிறேன். திரு. வெள்ளைதுரை எனும் தனி நபர் முயற்சியில் தென்மாவட்டத்தில் அரசியல்படுத்தப்படாத ஒரு இனத்தின் மாநாட்டில் சில ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டது ஒருவேளை ஏனைய தலைவர்களுக்கு சந்தோசம் தரலாம், ஆனால் உண்மையில் தென் தமிழக முத்தரையர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் இது திரு.வெள்ளைதுரையின் தோல்வியல்ல.., உங்களின் தோல்வி, உங்கள் ஆன்மாவின் தோல்வி, ஒருவேளை இதை திரு.வெள்ளைதுரையின் தோல்வியாகவே எடுத்துக்கொள்வோம், தென்மாவட்ட முத்தரையர்களே உங்கள் ஆன்மாவிற்க்கு சக்தியிருந்தால் சிவகங்கை தொடங்கி தென் தமிழகத்தில் இருக்கும் நூற்றிற்க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எதாவது ஒரு தொகுதியில், ஒரே ஒரு தொகுதியில் நீங்கள் / அல்லது நீங்கள் இருக்கும் அமைப்பு ஆதரிக்கும் கட்சியில் இருந்து முத்தரையர் ஒருவருக்கு எம்எல்ஏ சீட் வாங்கிவாருங்கள், நான் சமுதாயபணியில் இருந்தே விலகி கொள்கிறேன்.
கூட்டத்தில் நான் சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக கருதுகிறேன், நிச்சயமாக யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது, முத்தரையர் மக்களை தஜா செய்து காரியம் சாதித்துக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, அதற்க்கு ஏற்கனவே நிறைய தலைவர்கள் நம்மிடையே உண்டு, எனக்கு ஏற்பட்ட கோபம் சராசரியான எந்த முத்தரையனுக்கும் வரவேண்டும்..! அதனால்தான் அப்படி பேச வேண்டிவந்தது, ஒரு மாநாட்டிற்க்கு வருபவர்களுக்கு குறைந்தபட்ச இங்கீதம் கூட இல்லையென்றால் ஒரு சராசரி முத்தரையனுக்கு தார்மீக கோபம் வருவது இயல்புதானே...? அதனால் எனது பேச்சு யாரையும் காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்.
இந்த கட்டூரைக்கு "பங்கு கொடு..?" என்று ஏன் தலைப்பு என்று சிலருக்கு தோன்றி இருக்கும் smile உணர்ச்சிலை ஆமாம் நேற்று மாநாடு நடத்திய திடலை ஒட்டி இருந்த "டாஸ்மாக்" வழக்கத்தைவிட எப்படியும் மூன்று, நான்கு மடங்கு லாபத்தினை நேற்று ஒரே நாளில் பெற்றிருக்கும், எங்களுக்குதான் இடஒதுக்கீடும் கிடையாது, ஒரு எழவும் கிடையாது, எப்படியும் தமிழகத்தில் குடிப்பதில் எங்கள் சமூகத்தின் பங்கு மட்டும் ஒரு 40 முதல் 50 % இருக்கும், அதனால் இனி இடஒதுக்கீடு கொடு என்று சொல்வதைவிட, எங்கள் சமூக குடும்பதலைவர்களிடமிருந்து பிடுங்கும் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத பங்கை (!?) tongue உணர்ச்சிலை குடியால் அழிந்த குடும்பத்தில் கால்வயிற்று கஞ்சிக்கும் வக்கற்று தெருவிற்க்குவரும் எங்கள் சமூகத்தின் பெண்களுக்கு, குடும்பதலைவிகளுக்கு கொடு, frown உணர்ச்சிலை இதைவிட கேவலமாக ஒரு சமூகத்தின் அவலத்தை எழுதிவிட முடியாது என்றே கருதுகிறேன் இந்த நிலை மாற வேண்டும், என் சமூகமும் உயர்ந்திட வேண்டும், இந்த சமுதாயம் உயர்ந்திட நானும் ஒரு துரும்பாய் இருந்திடுவேன் என்றென்றும்...!
மற்றபடி கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதரர் மதுரை முருகேஷ், மேலூர் கதீர், திருப்பத்தூர் ரமேஷ், விருதுநகர் ராஜ்குமார், அண்ணன் முத்துராஜா என்று என்னற்ற தோழர்களை மாநாட்டிற்க்கு பிறகு சந்தித்து உரையாடலாம் என்று நினைத்திருந்தேன், கனமழையால் அது நடக்கவில்லை....! தம்பி மகேஷோடு சிறிது நேரம் பேச முடிந்தது, மற்றபடி கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புவிடுத்த மரியாதைக்குறிய திரு.வெள்ளைதுரை, தலைவர் எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம் அவர்களுக்கும் ஏனைய தலைவர்களுக்கும், மாநாட்டில் கலந்துகொண்ட என்னற்ற சமுதாய தலைவர்களுக்கும் எனது நன்றிகள்...!!
இன்னும் என் சமூகத்திற்க்கு அரசியல் குறித்த தெளிவு வரவில்லை என்பதற்க்கு இந்த மாநாடே உதாரணம்.. வரும் என்ற கனவோடு..
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக