தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சமீபத்தில் நடத்திய Group II தேர்வில் அவசியமற்ற வகையில் திரும்ப திரும்ப சில குறிப்பிட்ட சாதியின் பெயர் வரும் வகையில் வினாக்கள் தொகுக்கப்பட்டு இருக்கிறது, தேர்வு நடத்துவது தமிழக அரசுப் பணிக்குதானா..? அல்லது ஏதேனும் சாதி சங்கத்திற்க்கு ஆட்களை தேர்வு செய்கிறதா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்..?
சாதியில்லை, மதமுமில்லை என்று சில குறிப்பிட்ட சாதிமக்களிடம் மட்டும் (குறிப்பாக முத்தரையர்) தொடர்ந்து பிரச்சாரம் செய்து மூளைச்சலவை செய்யும் தமிழக அரசு சாதி குறித்து அதுவும் ஆயிரம் சாதிகள் இருக்கும் தமிழகத்தில், ஒரே ஒரு சாதி குறித்து மட்டும் நான்கு ஐந்து கேள்விகள் கேட்பது எதேட்சையா..? திட்டமிட்டு ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் நிலைப்பாடா..?
சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கவோ, மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பை வெளியிடவோ துப்பற்ற தமிழக அரசு, பணியாளர் தேர்வில் மட்டும் சாதி குறித்து கேள்வி எழுப்பலாமா..?
ஒருவிசயம் மட்டும் தெளிவாகிறது, தமிழக அரசாகட்டும், பணியாளர் தேர்வு வாரியமாகட்டும் அங்கெல்லாம் ஒரே ஒரு சாதியின் ஆதிக்கம்தான் இருக்கிறது என்பது தெளிவாகிறது
#தமிழக மக்கள் சிந்திக்கட்டும்...!
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக