நியமம் - சப்த கன்னியர் மேடு அல்லது கன்னிமார் திடல்
தமிழகத்தில் பிராமி,வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி, கெளமாரி,வராஹி என்ற சப்த கன்னியர் வழிப்பாட்டை தொடங்கி வைத்த பெருமை "முத்தரையரையே" சாரும், பின்னர் பல்லவர், பிற்கால சோழர் என்று பலரும் சப்த கன்னியர் வழிப்பாட்டை மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே நியமம் என்ற ஊரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) இந்த சப்தகன்னிமார்கள் சூழ பிடாரி அம்மனுக்கு கோவில் எடுப்பித்ததாக செந்தலைக் கல்வெட்டால் அறிய முடிகிறது.
இந்த இடம்தான் சப்தகன்னியர் மேடு என்று வழங்கப்படுகிறது, (படங்களை காணவும்) வயல்வெளிக்கு நடுவே உள்ள இந்த மேட்டில் ஒரு சிறிய மண்டபமும், அந்த மண்டபத்தின் முன்புறம் ஒரு வேலும் காணப்படுகிறது, "முத்தரையர்களின்" புனிததலமாக கருதப்படும் இந்த இடத்தில் வருடம் தவறாமல் வருகைதந்து படையல் இட்டு வழிபடும் ஒரே ஒரு தலைவர் திரு. கு.ப.கிருஷ்ணன் (ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர்) மட்டுமே..!
இந்த இடத்தை தேடி ஒரு புனித பயணத்தை சிங்க ராஜாக்கள் கட்சி நிறுவனர் திரு.அருணாச்சலம், செயலாளர் திரு. அன்பழகன் மற்றும் திரு. மணி ஆகியோரோடு கடந்த வாரத்தில் மேற்கொண்டு இருந்தோம்.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக