செவ்வாய், 19 ஜூலை, 2016

பேரரசர் சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை



பேரரசர் சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை

மூன்றாம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா கடந்த 15.08.2015 (சனிக்கிழமை) பட்டுக்கோட்டை குட்டாள் திருமண மண்டபத்தில் இனிதே நடந்தேறியது, தமிழ்தாய் வாழ்த்தோடு தொடங்கிய விழா, இந்த அறக்கட்டளையின் தூணாக விளங்கி மறைந்த திரு. .பா.மோகனுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலிக்கு பிறகு ஆசிரியர் திரு. அன்பரசன் வரவேற்புரை ஆற்ற, தலைமையுரையை சஞ்சய்காந்தி அம்பலக்காரர் ஆகிய நான் நிறைவு செய்த பிறகு சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு. அரிமா. மு.பாரதிதாசன் (பட்டிமன்ற நடுவர், காரைக்குடி) சிறப்புரைக்கு பிறகு

 திரு. அரங்கசாமி (செயலாளர்), திரு. வீ.முரளிகணேஷ் (மு.மாவட்ட தலைவர் பாஜக), திரு. ஆர்.பி.ரமேஷ் (மாளியக்காடு ஊராட்சி மன்ற தலைவர்), திரு. மணியரசர் (ஊராட்சி மன்ற தலைவர் மழவேனிற்காடு), திரு. எம்.ஆர்.செந்தில்குமார் ( பட்டுக்கோட்டை நகர் மன்ற உறுப்பினர்), திரு. ஆர்.வீரையன் (திமுக நகர துணைச்செயலாளர் பட்டுக்கோட்டை), திருமதி. ஆசிரியை கெளரியம்மாள், திரு. சுபாஸ் சந்திரபோஸ் (ஒன்றியகுழு உறுப்பினர், திரு. .இளவழகன் ஆகியோர் பேசினர். முடிவில் பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்ற மாணவ மாணவியர் 60 பேருக்கும், பன்னிரெண்டாம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்ற 18 மாணவ மாணவியருக்கும் பரிசுத்தொகையோடு, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் படம் பதித்த கேடயமும். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் படம் பதித்த சான்றிதழும், “வயிறு மட்டும் வாழ்க்கையல்ல” என்ற நூலும் கொடையாளர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
முடிவில் திரு. டி.எம்.தமிழரசன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
தலைவர், பேரரசர் சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை,
ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்













































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக