ஞாயிறு, 5 ஜூன், 2016

வளரி...!

வளரி...! 
 
 

டாக்டர் பிரிதா நிலா பற்றிய விகடன் கட்டூரையை பார்த்த பிறகுதான் நான் எழுதாமல் விட்டு சென்ற ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது.

கடந்த 2015 டிசம்பர் மாதம் நான்காம் நாள், தேனியில் இருக்கும் நாடார் சரஸ்வதி பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் பண்டைய தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக மறைந்துபோன கலையாக இருக்கும் "வளரி" குறித்த விளக்கமும், செயல்முறையும் "கற்கை நன்றே" என்ற தலைப்பில் நடந்தது,

இதில் வளரி பயிற்றுவிக்க பெங்களூருவில் இருந்து வளரி கலை நிபுணர் சகோதரர் டாக்டர் மணிகண்டன் ரெங்கநாதன் கலந்து கொண்டு வளரி பயிற்சி வழங்க இருப்பதாக கேள்விப்பட்டு நானும் அந்த நிகழ்வில் பயிற்சி பெரும் நோக்கில் கலந்து கொண்டேன். அந்த விழாவில் வளரி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள், ஒரு விசயம் மட்டும் நெருடலாக இருந்தது அது வளரியின் தோன்றுவாய், ஆம் வளரி என்ற கலை தமிழினத்தின் எந்த குடியில் இருந்து வந்தது என்பதை சொல்லாமல் அது ஒரு முழுமையான விழிப்புணர்வாக இருக்க முடியாது என்பதை உணர்ந்து டாக்டர் பிரிதாவிடமும், டாக்டர் மணிகண்டனிடமும் வரலாற்றையும் சொல்லுங்கள் என்று சொன்னேன், அதை நீங்களே செய்யுங்கள் என்று சொல்லி வழியமைத்து தந்தார்கள் (இருவருக்கும் இந்த தருணத்தில் நன்றி..!)

நூற்றுக்கணக்கான மாணவியர் முன்பு எனது பாரம்பரியத்தை பெருமிதத்தோடு சொன்னேன், வளரி என்ற கலை எப்படி தோன்றியது ? யார் இதற்க்கு முன்னோடி ? வளரிக்கும் வலையருக்கும் (முத்தரையருக்கும்) என்ன தொடர்பு ? இந்த கருவியை பயன்படுத்தி எப்படியெல்லாம் எதிரிகளை வீழ்த்த முடியும் ? இந்த கருவியின் பயன்பாடு என்று எனக்கு தெரிந்த வரலாற்றோடு "பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் முன்பு வீரமல்லன் என்ற முத்தரையர் குல போர்வீரன் பறந்துகொண்டிருந்த செங்கால் நாரையை எப்படி வீழ்த்தினான்" என்று அகிலனின் வேங்கையின் மைந்தன் சொன்ன கதையையும் சொல்லி பெருமிதத்தோடு நிறைவு செய்தேன்.

இறுதியாக எனக்கு மட்டும் வளரி வீச கற்று தந்த டாக்டர் மணிகண்டன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை உரித்தாக்கி கொள்கிறேன். :)

தேர்தல் / அரசியல் பரபரப்புக்களுக்கிடையே விடுபட்டு போன விசயத்தை மீண்டும் தொடங்க‌ மிக விரைவில் வளரிக்காக சிறப்பு பயிற்சி முகாம் ஒன்றினை டாக்டர் மணிகண்டனை கொண்டு நடந்த ஆர்வமாக இருக்கிறேன். இது தொடர்பாக சகோதரர்கள் மதுரை மகேஷ், அலங்கை ஜெயராமன், முசிறி கோபிநாத் இவர்களோடு விவாதித்து கொண்டு இருக்கிறேன்.

மிக விரைவில் வளரி மீண்டும் வளையர்கள் கைகளுக்கு வரும்.....

-கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்


http://www.vikatan.com/news/tamilnadu/64890-theni-school-teaches-life-education-programme.art

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக