திருப்பத்தூரில் மாமனிதர் தொ.ஆண்டியப்பன் முத்தரையர் சமூகப்பணிகள் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில்
முத்தரையர் ஐ.டி.ஐ. முன்னாள் தலைவர் நல்லிக்காளை தலைமை வகித்தார்.
முன்னதாக வட்டார முத்தரையர் சங்கப் பொருளாளர் பாண்டி வரவேற்றார். பின்னர்
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் நூலை வெளியிட புதுக்கோட்டை முன்னாள்
மாவட்டத் தலைவர் சிவஜோதி பெற்றுக் கொண்டார். இதில் ராஜகண்ணப்பன் பேசியது:
அதிமுக ஆட்சியில் தான் பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் அறிவிக்கப்பட்டது.
திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையும் நிறுவப்பட்டது. இன்னும்
முத்தரையர் சமுதாயத்தில் கல்வி, பொருளாதாரம், போன்றவற்றில் மேம்பாடு அடைய
அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆண்டியப்பன் போன்ற சமுதாய சிந்தனை உள்ள
இன்னும் பலபேர் உருவாக வேண்டும் என்று பேசினார்.
விழாவில்
திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை
சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம.அருணகிரி,
காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் அபிமன்யு, பேரூராட்சித் தலைவர்
சோமசுந்தரம், தமாக கொள்கைப் பரப்புச் செயலர் ஹபிபுல்லா, ஊராட்சிமன்றத்
தலைவர்கள் ஆத்தங்கரைப்பட்டி ஆறுமுகம், மு.மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்து கொண்டனர். விழாவில் முன்னாள் மாநிலத் தலைவர் தொ.ஆண்டியப்பன்
ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சி முடிவில் ஜெயக்கண்ணன் நன்றி கூறினார். விழா
ஏற்பாடுகளை திருக்கோஷ்டியூர் வட்டார முத்தரையர் சங்கத்தினர்
செய்திருந்தனர்.
News Source : DINAMANI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக