புதுச்சேரி, : புதுச்சேரி முத்தரையர்பாளையம் முத்தரையர் மேனிலைப்பள்ளியில்
மாநில அளவிலான பல்கலை போட்டிகள் நடைபெற்றன. பள்ளி முதல்வர் முத்து ராமன்
தலைமை தாங்கினார். துணை முதல்வர் அனந்தசயனம், தாளாளர் சரஸ்வதி ஆகியோர்
முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக புதுவை நகர திட்டக்குழும தலைவர்
கேஎஸ்பி.ரமேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் புதுவையில் இயங்கும் 50க்கும்
மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவ,
மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும்
பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பேச்சு, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல், திருக்குறள் ஒப்புவித்தல், கதை கூறுதல், கைவினை பொருட்கள் தயாரித்தல், தனிநபர் மற்றும் குழு நடன போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக போட்டிகளில் வென்ற பேட்ரிக் மேல்நிலை பள்ளிக்கு முத்தரையர் பள்ளி கோப்பை வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தீனன், விமல்ராஜ், அலுவலக நிர்வாகி நாராயணசாமி செய்தனர்.

News Source : DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக