செவ்வாய், 29 செப்டம்பர், 2015

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருச்சி பன்னாட்டு விமான நிலையமாக்குவோம்








     நேற்று முந்தினம்  பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் வைக்ககோரி பாமக நிறுவனர் மதிப்பிற்க்குறிய மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் சார்பில் நன்றியினை உரித்தாக்குகிறோம்.

       1978 ஆம் ஆண்டு புதுக்கோட்டை முத்தரையர் மாநாட்டில் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் முத்தரையர் சமுதாயத்திற்க்கு அமைச்சரவையில் பிரதிநிதிதுவம் தருவோம் என்ற அறிவிப்புக்கு பிறகு (அந்த அறிவிப்புக்காக இன்றுவரை வேறு எந்த பிரதிபலனும் இல்லாமல் அஇஅதிமுகவை ஆதரித்து வருவது அனைவரும் அறிந்ததுதான்) முத்தரையர் சமூகத்திற்க்கு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அரசியல் கட்சியாக பாமக கொடுத்திருத்திருக்கும் இந்த அறிக்கையைதான் சொல்ல வேண்டும்.

     இந்த கோரிக்கையை இத்தோடு விடாமல் இதனை தங்களால் இயன்ற அளவு முழுமைப்பெற செய்ய பணிவுடன் பாமகவை வேண்டுகிறோம். இந்த ஒரே ஒரு கோரிக்கையின் மூலம் உறங்கி கிடந்த முத்தரையர் மக்கள் மனதில் புதிய எழுச்சியை ஏற்படுத்திவிட்டீர்கள், இதற்க்கு நேரடியாக நன்றி என்று ஒரு வார்த்தையில் நான் சொல்வதைவிட இந்த ஒரு அறிக்கைக்கான பலனை பாமக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மத்திய மாவட்டங்களில் அதுபெறப்போகும் வெற்றியை சமர்பிப்பதில் பெருமிதம் கொள்வோம்,

    எங்கள் சமூகத்திற்காகவென எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் பொதுவெளில் அதிகம் அறியப்பட்ட, அதுவும் அறிவுசார்ந்து நடக்கும் ஒரே கட்சியான பாமக இந்த கோரிக்கையினை வைத்ததன் மூலம் இனி ஆக்கப்பூர்வமாக இந்த கோரிக்கை வலுப்பெறும் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

    இந்த கோரிக்கை மீது உடனடியாக தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா உரிய கவனத்தை செலுத்தி தமிழக சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரிலேயே உரிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அது ஏற்கனவே இருக்கும் ஆதரவாளர்களை தக்கவைத்துக்கொள்ள அதிமுகவுக்கு உதவும் இல்லாதபட்சத்தில் அதன் பிரதிபலிப்பு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தெரியும்.

   இந்த கோரிக்கையை பாமக வைத்ததன் மூலம் அந்த கட்சிக்கு ஆதாயம் (?!) என்று சில விசமிகள் இங்கு பிரச்சாரம் செய்யக்கூடும் அந்த கட்சி ஆதாயமே அடையட்டுமே..? அதனால் என்ன இதை செய்பவர்களால் நமக்கு என்ன கிடைத்தது ? பிரச்சாரம் செய்பவர்களின் பிண்ணனியை பாருங்கள் அவர்கள் திராவிடத்தின் அடியொற்றி நடப்பவர்களாக இருப்பார்கள், ஆகவே இந்த விமர்சனங்களை புறந்தள்ளுவோம்.

   உறங்கி கிடந்த நமக்கு கிடைத்த ஊக்கமருந்தாக இந்த அறிக்கையை எடுத்துக்கொள்வோம், இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரின் தனிப்பிரிவிற்க்கு அனுப்புங்கள், கோரிக்கை நிறைவேறும்வரை போராடவும் தயாராக இருங்கள்.

     முதலமைச்சர் ஜெயலலிதா விரைந்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தாய்லாந்து நாட்டில் நடந்ததுபோன்று "மஞ்சள் ஆடை உள்ளிருப்பு போராட்டம்" ஒரு லட்சம் இளைஞர்களை திரட்டி கோரிக்கை நிறைவேறும்வரை விமான நிலையத்தின் அனைத்து வழிகளையும் அடைத்து போராட எங்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்வோம், கோரிக்கையின் வலிமையை புரிய வைப்போம், தமிழக அரசுக்கு தெரியும், ஒரு லட்சம் முத்தரையரை திருச்சியில் திரட்டுவது கடினமான பணியல்ல என்பது எங்களை அந்த நிலைக்கு மாற்றமாட்டார்கள் என்று நம்புகிறோம்.

   ஒரு கோரிக்கையையாவது வென்று எடுப்பது மட்டுமே சமூக விடுதலைக்கு வழிவகுக்கும், இந்த நெருப்பை அணையாமல் காக்க வேண்டிய பெரும்பொருப்பினை "முத்தரையர்" அனைவரும் ஏற்க வேண்டும்,

விரைவில்

"பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருச்சி பன்னாட்டு விமான நிலையமாக்குவோம்"

உணர்வோடு....

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக