இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் ஆலோசனை மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று (03/10/2015) சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு இயக்க அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் திரு.இ.இளவழகன் (துணைச்செயலாளர்) வரவேற்புரை ஆற்றினார், திரு. மு.காந்தி, (செயலாளர்), முன்னிலை வகித்தார்
திரு. கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் (தலைமை ஒருங்கிணைப்பாளர்) தலைமை வகித்தார், கூட்டத்தில் புதிய நிர்வாகிகளின் அறிமுகத்திற்க்கு பிறகு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் :
1. 2016 சட்டமன்ற தேர்தலில் பிரதான கட்சிகள் (திமுக, அதிமுக உட்பட) பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஒரு முத்தரையரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும், தவறும்பட்சத்தில் "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின்" சார்பில் ஒரு வேட்பாளரை களமிறக்கி வெற்றிக்கு பாடுபடுவது.
2. பாமக நிறுவனர் மருத்துவர். இராமதாஸ் சமீபத்தில் மத்திய. மாநில அரசுகளை வலியுறுத்திய திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" பெயரை உடனே சூட்டிட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது, இந்த கோரிக்கையினை விடுத்த பாமக நிறுவனருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
3. முன்னாள் அமைச்சர் "ஆலங்குடி வெங்கடாசலம்” படுகொலை செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகியும் உண்மை குற்றவாளியை கைது செய்யவில்லை ஆகவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. அன்னாரின் ஐந்தாம் ஆண்டு நினைவுதினமான அக்டோபர் 7 ந்தேதியை "சமூக எழுச்சி நாளாக" கடைபிடிப்பது.
4. முத்தரையர் சமூகத்திற்க்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
5. காவேரியில் உரிய பங்கு நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக மாநிலத்திற்க்கு இந்த கூட்டம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. அதேபோல காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதிக்கும் மத்திய அரசின் போக்கிற்க்கும் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.
6. தொடந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்து துன்புறுத்துவதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கையினை இந்திய மத்திய அரசு எடுக்க இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
7. பட்டுக்கோட்டை அரசு பொதுமருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவகல்லூரியாக்க வேண்டும், போதிய மருத்துவர்களை நியமித்து மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்திட இந்த கூட்டம் வலியுறுத்துகிறது, இந்த கோரிக்கையினை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தினை இயக்கம் மிக விரைவில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
இந்த கூட்டத்தில் திரு.பொன்னை அன்பு, திரு, இராஜ்குமார், திரு. கரிசை தமிழ், திரு. திரு.வருண்ராஜ், திரு. ரங்கராஜ், திரு. மகேந்திரன், திரு.அதிபன், திரு. சுரேந்திரன், திரு. அன்பரசன், திரு. தீபக், திரு. கேசவன், திரு.விஜயகுமார், திரு.மகேந்திரன், திரு.அருண், திரு.கார்த்திக், திரு. தொண்டையக்காடு செந்தில், திரு. சதிஸ், திரு. பாஸ்கர், திரு. அஜித், திரு.மணிவண்ணன், திரு.இராஜபாண்டியன்,திரு.முத்துகுமார், திரு.தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் திரு.மேனிராஜா (பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர்) நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக