புதன், 14 அக்டோபர், 2015

அ.தி.மு.க.,வில் மா.செ., பதவி வன்னியர்களுக்கு முக்கியத்துவம்


சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலர் பதவி, வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, அதிகம் வழங்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் பட்டியல், 7ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தலை முன்னிட்டு, அனைத்து சமுதாயத்தினருக்கும், முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாவட்ட செயலர்கள் பட்டியல் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலுக்கு முன், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த, 13 பேர் மாவட்ட செயலர்களாக இருந்தனர்; அவர்களில், தென் சென்னை வடக்கு மாவட்ட செயலர் கலைராஜன் நீக்கப்பட்டுள்ளார். 

அதற்கு அடுத்ததாக, கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த, 10 பேர் மாவட்ட செயலர்களாக இருந்தனர்; அதில், இப்போதும் மாற்றம் இல்லை. அதேநேரத்தில், உட்கட்சி தேர்தலுக்கு முன், வன்னியர் சமூகத்தை சேர்ந்த, ஏழு பேர், மாவட்ட செயலர்களாக இருந்தனர். தற்போது, அந்த எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது. கூடுதலாக, தென் சென்னை தெற்கு, விழுப்புரம் தெற்கு, காஞ்சிபுரம் மத்திய மாவட்டங்களில், வன்னியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோல, நாடார், உடையார், நாயுடு, செட்டியார், விஸ்வகர்மா போன்ற சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முத்தரையர் சமூகத்தினர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் அதிகம்.ஆனாலும், அந்த சமூகத்தை சேர்ந்த யாருக்கும், மாவட்ட செயலர் பதவி வழங்கப்படவில்லை. இது, அந்த சமூகத்தை சேர்ந்தவர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இருந்தாலும், இதை ஈடுகட்ட, தலைமை நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் நியமனத்தில், முக்கியத்துவம் அளிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
News Source : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக