ஆண்டாண்டு காலமாய் அமைப்புகள் கூட வேண்டும், தலைவர்கள் சேர வேண்டும் என்று தம்முடைய கடமையில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒவ்வொரு முத்தரையரும் முயற்சிப்பது வழக்கமான நிகழ்வுதான், பல நேரங்களில் அது சாத்தியமானதுதானா..? என்று நாமும் குழம்பிபோனதுண்டு ஆனாலும் வெறுமனே ஏன் சொல்லிக்கொண்டு மட்டும் இருக்க வேண்டும்..? முயற்சித்துதான் பார்ப்போமே..? என்று எந்த அமைப்பிலும் இல்லாத புதுக்கோட்டை நண்பர் வி.ஆர். ஜெயகுமார் இன்று புதுக்கோட்டை நகரில் இருக்கும் ராயல் பேலஸ் ஹோட்டலில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து முத்தரையர் அமைப்புகளுக்கும் அழைப்புவிடுத்து முதல் முயற்சியாக "முத்தரையர் கூட்டமைப்பாக" அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்தார். அவருக்கு முதலில் நான் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைய கூட்டத்தில்
1. திரு. மரு. பாஸ்கரன்
பொதுச்செயலாளர், தமிழ்நாடு முத்தரையர் சங்கம்
2. திரு. வீ. கிருஷ்ணமூர்த்தி
மாநில செயலாளர், இந்திய திராவிட முத்தரையர் கழகம்
3. திரு. ஏ. எழில்ராஜா
தலைவர், முத்தரையர் நல சங்கம்
4. திரு. எம்.வீ.ஆர்.சிரஞ்சீவி
பொதுச்செயலாளர், புரட்சி சிங்கங்கள் அமைப்பு
5. திரு. சி.சரவணன்
நிறுவனர், சோழநாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்
6. திரு. ஆர். அன்பழகன்
செயலாளர், சிங்க ராஜாக்கள் கட்சி
மற்றும்
7. கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
ஆகிய நான் உட்பட ஏழு அமைப்புகள் கலந்துகொண்டு இன்றைய அரசியல் நிகழ்வுகள், எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், போராட்டங்களை எப்படி முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதித்தோம், முதல் அமர்வினை புதுக்கோட்டையில் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம் அடுத்த அமர்வு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஒருங்கிணைக்க இருக்கிறோம்,
மேலே குறிப்பிட்ட அமைப்புகள் தவிர ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம், இந்த நிகழ்வுக்கு அனைத்து அமைப்புகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு இருந்தது ஆனாலும் இந்த அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டன. ஒருவேளை அழைப்புகொடுக்கப்படாத அமைப்புகள் வேறு ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள், அவர்களையும் அழைப்போம். அழைத்தும் இந்த அமர்வில் கலந்து கொள்ளாத / முடியாத அமைப்புகள் அடுத்த அமர்வில் கலந்துக்கொண்டு உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்க அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக