ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட அறந்தாங்கி வடக்கு ஒன்றிய செயலாளருக்கு பதிலாக புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என அக்கட்சியின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறந்தாங்கியில் அ.தி.மு.க வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த முத்தரையர் இன அ.தி.மு.கவினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ ப.அரசன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியச் செயலாளர் காசிமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் நெவளிநாதன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராமலிங்கம், கோவிந்தராசு, இந்திராமுத்துராமன், மலர்வள்ளிநாகையா, ஒன்றியக் கவுன்சிலர் ஆத்மநாதன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அறந்தாங்கி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் வேலாயுதத்தை மாற்றிவிட்டு பெரும்பாண்மையுள்ள முத்தரையர் இனத்தில் இருந்து ஒருவரை புதிதாக ஒருவரை நியமனம் செய்யவேண்டும் என ஜெயலலிதாவை கேட்டுக் கொள்வது. இக்கோரிக்கையை வலியுறுத்துவதற்காக சென்னை சென்று ஜெயலலிதாவை சந்திப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-இரா.பகத்சிங்.
News Source : NAKKERAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக