சனி, 10 அக்டோபர், 2015

முன்னாள் அமைச்சர் நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி

முன்னாள் அமைச்சர் நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொலை செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சரின் நினைவிடத்தில் கட்சியினர், பொதுமக்கள் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டைச் சேர்ந்தவர் அ. வெங்கடாசலம். இவர் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர், 2010 அக். 7-ம் தேதி சில மர்ம நபர்களால் அவரது வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரது 5-ம் ஆண்டு நினைவு தினமான புதன்கிழமை ஆயிரக்கணக்கானோர் வடகாடு பெரியகடை வீதியில் இருந்து ஊர்வலமாகச் சென்று காகித ஆலைச் சாலை அருகே உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, துணைச் செயலர் சுப. அருள்மணி, அதிமுக மாவட்ட விவசாய அணிச் செயலர் ந. மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் த. செங்கோடன், ஒன்றியக்குழுத் தலைவர் துரை. தனசேகரன், திமுக ஒன்றியச் செயலர் ஞான. இளங்கோவன், ஏ.வி. ராஜபாண்டியன், ந. நவமணி, ந. மோகன், ந. தர்மராஜ், ரவிக்கண்ணன் உள்ளிட்ட அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள், முத்தரையர் சங்கத்தினர் என சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

News Source : DINAMANI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக