வெள்ளி, 6 நவம்பர், 2015

புதுக்கோட்டை காவல்துறை ஆளும் வர்க்கத்தின் ஏவல்துறையாக மாற்றப்பட்டுள்ளது: சிபிஐ கண்டனம்

துக்கோட்டை மாவட்ட காவல்த்துறை ஆளும் வர்க்கத்தின் ஏவல்துறையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியகம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க மாவட்டசெயலாளரும் மக்ள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் அதே கட்சியை சேர்ந்த ஊராட்சிஒன்றியக்குழு தலைவரை சாதியயை சொல்லி பேசியதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவியுள்ளது.இதன்விளைவாக கண்டண ஆhப்பாட்டம் நடத்தும் சூழ்நிலையை  ஆளும் கட்சியினர் உருவாக்கி தனது அதிகார ஆணவ ஆதிக்கமனோபாவத்தை வெளிபடுத்தியுள்ளது.இதற்க்குள்ளே பதவியை அடைவதற்க்கும் பணம் பண்ணுவதற்க்கும் மறைமுக போட்டியும் இருப்பதாக பலரால் பேசப்படுகிறது. இதனை மாவட்ட காவல்த்துறை கையாண்ட அனுகு முறை முற்றிலும் ஜனநாயக விரோதசெயலக நடந்துகொண்டது.

 கண்டனத்திற்க்குரிய செயல் காவல்த்துறை வேண்டுமானால் ஆளும் வர்க்கத்திற்க்கு கட்டுபடும் எந்திரமாக இயங்கியுள்ளது. ஆhப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்த முதல்நாளே முன்னெச் சரிக்ககை நடவடிக்கை என்று புதுக்கோட்டை நகர எல்லைக்குள்ளே வரவிடாமல் நகர எல்லைகளை சீல்வைத்தது போல் காவல்த்துறையினர் மொத்தமும்  களத்தில் இறங்கி சமுகபதட்டத்தை உருவாக்கிவிட்டனர். சுமார் 3000ஆயிரம்பேரை கைதுசெய்துள்ள செயல்தான் சாதீய வன்மத்தை தூண்டுவதாக உள்ளது.எனவே மேற்க்கண்ட சமுகவலைதளங்களில் வந்த செய்திகள் உண்மையா அல்லது வாந்தியா என்பதை காவல்துறை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.அதைவிடுத்து ஜனநாயக குரல்வலையை நசுக்குவது முலம் சமு அமைதியை நிலைநிறுத்தமுடியா என்பதை மாவட்ட காவல்துறையும் ஆளும்கட்சியினரும் சிந்திப்பது நல்லது. எனவே மேற்கண்ட காவல்த்துறை அனுகு முறையை கண்டிப்பதுடன் கைதானவர்கள் அனை வரையும் விடுதலைசெய்ய வேண்டும் என மாவட்டகுழு சார்பி;ல் கேட்டுகொள்ளப்படுகிறது.

News Source : நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக