அமைச்சர் விஜயபாஸ்கரின் உருவபொம்மை எரிப்பு ( படங்கள் )
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான விஜயபாஸ்கர், கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் கெங்கையம்மாள் சொக்கலிங்கத்திடம் சாதியை இழிவுபடுத்திப் பேசியதாக முத்தரையர் சமூகத்தினர் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே ஆர்பாட்டம் செய்ய திரண்டனர். ஆனால் ஆர்பாட்டம் செய்ய அனுமதி இல்லை என்று போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டதையடுத்து, மாவட்டம் முழுவதும் போலிசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மாவட்ட அதிமுக அலுவலகம் மீது ஆர்ப்பாட்டம் நடந்த வந்தவர்கள் கல் வீசி எறிந்தனர். இதனால் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை சம்பவ இடத்தில் இருந்து அப்புறப் படுத்தினர்.
போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைந்துபோக செய்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்களின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே சாலை மறியல் செய்தனர். மேலும் மரங்களை வெட்டி சாலையில் மறியல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையாகி வீட்டிற்கு வாகனங்களில் சென்றுகொண்டிருந்தவர்கள் ஆங்காங்கே கூடி நின்று அமைச்சர் விஜயபாஸ்கரின் உருவபொம்மையை எரித்தனர்.
News Source : நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக