சென்னை, ஜன.6:
ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான காலம் இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில்
ஜல்லிக் கட்டு நடைபெறுமா, நடைபெறாதா? என்பது குறித்து கட்சிகளிடையே கடும்
விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்படியும் நடந்தே தீரும் என்று பிஜேபி
உறுதியுடன் கூறுகிறது. ஆனால் எந்த அனுமதியும் இல்லாத நிலையில் எப்படி
ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள் வினவுகின்றன.
|
|
. | |
தமிழர்களின்
பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த எப்படியும் அனுமதி
பெற்றுத் தரப்படும் என்று தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.
ராதாகிருஷ்ணன் உறுதிபட கூறியிருந்தார்.கடந்த 1-ந் தேதி அன்று நடைபெற்ற
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்
என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் அமைச்சரவையில்
எடுக்கப்படாததால் பெரும் ஏமாற் றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தென் மாவட்டங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசிடமிருந்து எந்த ஒரு கிரீன் சிக்னலும் வரவில்லை.ஆனால் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார். மேலும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் ஜல்லிக்கட்டை நடத்த மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக அவர் கூறினார். இதனி டையே வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய பிஜேபி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடுவதே காங்கிரஸ்தான். இந்த விஷயத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. தொடர்ந்து பிஜேபி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. அந்த தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார். இது பற்றி திருமாவளவன் கூறுகையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுகிறது. மத்திய மாநில அரசுகள் விரைவாக போட்டியை நடத்த அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்றார். இதனிடையே அலங்காநல்லூரில் முத்தரையர் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அலங்காநல்லூர் அருகே உள்ள சத்திரப்பட்டியில் காளைகளை வைத்து, பொங்கல் வைத்து மக்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு போராட்டம் நடத்தினார்கள். இதேபோல தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சில கிராமங்களில் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மாடுகளுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு சில தினங்களில் இதுபற்றிய முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
News Source : மாலைசுடர்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக