நேற்றைய சோக நிகழ்வின் தொகுப்பு.... :(
அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ படிக்கும் மாணவி சுலோச்சனா, இவர் அதே அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெருவில் வசிக்கும் எல்ஐசி முகவர் சங்கர் என்பவரின் மகள், முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
அந்த மாணவி என்.சி.சியிலும் பங்கெடுத்து இருந்தார், நேற்று கல்லூரியில் நடந்த குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு நடத்த கடந்த ஒரு வாரமாக சீனியர் மாணவிகளோடு ஒத்திகையில் ஈடுபட்டு இருக்கும்போது கருத்து முரண்பாடு ஏற்பட்டு மூத்த மாணவி (கமாண்டர்) ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசியும் அடித்தும் துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனை சுலோச்சனா வீட்டில் சொல்லி தனது தாயாரை அழைத்து சென்று என்.சி.சிக்கு பொருப்பு அதிகாரியாக இருக்ககூடிய பேராசிரியர் கணபதியிடம் முறையிட்டதாக தெரிகிறது.
ஆனால் அவர் எந்த விசாரணையும் நடத்தாமல் மூத்த மாணவிகளை கண்டிக்காமல் விட்டதன் விளைவாக தொடர்ந்து மூத்த மாணவிகள் இவரை துன்புறுத்தியதாக தெரிகிறது. அதே கல்லூரியில் சுலோச்சனாவோடு படித்த ஏரிப்புரக்கரை கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு மாணவி மூன்று நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டது. அந்த மாணவியும், சுலோச்சனாவும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்கிறார்கள் ஆக ஒருசேர பல தொந்தரவுகள் இருந்ததனால் மன உளச்சலில் இருந்த சுலோச்சனா அவசர அவசரமாக இப்படி ஒரு முடிவை தேடிக்கொண்டாள்.
இதை தவிர வேறு எதேனும் பிரச்சனைகள், தொந்தரவுகள், துன்புறுத்தல்கள் இருந்ததா..? வேறு எதேனும் தொல்லைகள் இருந்ததா ? என்பது இன்னும் முழுமையாக ஒருவருக்கும் தெரியவில்லை.
மன உலைச்சலோடு கல்லூரியில் பெண்களுக்கான ஓய்வறைக்கு சென்ற சுலோச்சனா தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை (?!) செய்துகொண்டாள் இந்த சம்பவம் காலை 9 மணியில் இருந்து 9.30க்குள் முடிந்து விட்டது. இதன்பிறகே தகவல் கிடைத்து மாணவியின் உறவினர்கள் கல்லூரி முன்பு குவிகிறார்கள் காலை சரியாக 10 மணிக்கு எனக்கு தகவலை தமிழரசன் கொடுக்கிறார். அதற்குள் வழக்கறிஞர் முரளிகணேஷ் சம்பவ இடத்திற்க்கு நேரில் செல்கிறார், தூக்கிட்ட மாணவியின் உடலை கீழே இறக்காமல் உறவினர்கள் போராட ஆயத்தமாகிறார்கள், தகவல் கிடைத்து காவல்துறை பெருமளவில் குவிக்கப்படுகிறது.
சரியாக 11 மணிக்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உரிய விசாரணை நடத்துவதாகவும் உத்திரவாதம் தந்ததின்பேரில் உடல் இறக்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடல் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்கிடையில் பொருப்பு அதிகாரி பேராசிரியர் கணபதி மற்றும் என்.சி.சி கமாண்டராக இருக்ககூடிய மூத்த மாணவி ஆகியோரை விசாரணைக்காக காவல்துறை அழைத்து வருகிறது, ஆனால் கல்லூரி தரப்பில் இருந்து யாரும் விளக்கமளிக்கவோ, கல்லூரி முதல்வர் நேரில் ஆஜராகவோ இல்லை, இது நம் மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது ஆகவே பிரேத பரிசோதனைக்கு முன்பு கல்லூரி முதல்வரை அழைத்து விசாரித்தால்தால் பிரேதத்தை வாங்குவோம் என்று சொல்லி சுமார் 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் அதிராம்பட்டினம் காவல் நிலையம் முன்பு குவிந்தனர், நேரம் ஆக ஆக மக்களின் எண்ணிக்கை கூடுவதை கண்ட காவல்துறை நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டு இறுதியாக 5.30 மணிக்கு ஏ.எஸ்.பி அரவிந்த் மேனன் நேரில் வந்து இதனை தீவிரமான விசாரிப்பதாகவும், தவறு செய்தவர்களை கண்டிப்பாக கைது செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததன் பேரில் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று வீட்டிற்க்கு கொண்டு சென்று இறுதி மரியாதையோடு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த மொத்த நிகழ்விலும் நமக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்கள் நிறைய..
1) கல்லூரி நிர்வாகம் ஏன் மொளனம் சாதிக்கிறது..?
2) உண்மையில் கல்லூரிக்குள் என்ன நடந்தது..?
3) என்.சி.சி அதிகாரியிடம் முறையிட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..?
4) தோழி இறந்த மூன்றாவது நாளில் இந்த மாணவியும் மர்மமாக இறந்தும் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறதா..?
5) வேறு ஏதேனும் தொந்தரவுகள் இருந்ததா..?
இப்படி கேள்விகள் பிறந்துகொண்டே இருக்கிறது, இந்த நிகழ்வுகள் எல்லாம் முடிய இரவு 8 மணி ஆகிவிட்டது அதுவரை நாம் களத்திலேயே இருந்தோம்.
இந்த தருணத்தில் என் இனமான பெண்பிள்ளைகளிடம் பணிவோடு வேண்டுகிறேன், எப்போதும் தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல..., இதுபோன்ற பிரச்சனைகளை நீங்கள் எங்கே..? எப்போது..? யாரால்..? சந்தித்தாலும் தயங்காமல் உங்கள் குடும்பத்தாரிடம் சொல்லுங்கள் அல்லது சகோதர உறவுடையவர்களிடம் முறையிடுங்கள் அல்லது எங்களைப்போல அமைப்பாக இருப்பவர்களிடம் முறையிடுங்கள் நிச்சயமாக உங்களுக்கான பாதுகாப்பினை எங்களால் தர முடியும், அதற்காக நாங்கள் எந்த இழப்பையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.
இந்த மாணவி பிரச்சனையில்கூட இதுதான் பிரச்சனையென்றால் தொந்தரவு செய்தவளை செருப்பால் அடித்துவிட்டு வந்திருந்தால் பாராட்டி இருக்க முடியும், எந்த பிரச்சனை வந்தாலும் சந்தித்திருக்க முடியும் ஆனால் தவறான முடிவை தேடி தேவையற்ற மன உலச்சலை தந்து காற்றோடு கலந்துவிட்டாள் சுலோச்சனா...!
இந்த பிரச்சனையை இத்தோடு விடுவதாக இல்லை, தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இதில் கல்லூரி நிர்வாகத்தோடு மட்டும்தான் முரண்பாடே தவிர இந்துக்கள் - முஸ்லீமுக்கோ, முத்தரையர்-முஸ்லீமுக்கோ இடையே இல்லை இதை ஏன் சொல்கிறேன் என்றால் காவல்துறையே நேற்று இப்படியான தகவலை பரப்ப முயன்று தோற்றுபோனது.
-சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
9159168228
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக