என்னதான் நடக்கிறது...? மாற்றி யோசிப்போம்....!
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போம்,
ஜல்லிக்கட்டு, வடமாடு விடுவோம்,
உயிரை பணையம் வைத்து காளையையும் அடக்குவோம்,
போட்டி நடத்த தடைவிதித்தால் வீதிக்கு வந்து போராடுவோம்,
தடை தளர்த்தப்பட்டால் உற்சாகமாக வெடி வெடித்தும் கொண்டாடுவோம்.
எல்லாம் சரி "காளை வளர்ப்போர் சங்கம்", "ஜல்லிகட்டு பேரவை" "வீரவிளையாட்டு சங்கம்" லொட்டு லொஸ்கு என்று நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இருந்தாலும் எந்த அமைப்பிலும் என் சாதிகாரன் தலைவர் கிடையாது, என் சாதிகாரனை அழைத்து எந்த பேச்சுவார்த்தையையும் எந்த அரசும் செய்யாது.
அதேபோலதான்..
பள்ளிக்கூடத்தில் படிக்கிற நம்மவீட்டு சின்ன பசங்ககூட ரொம்ப ஆர்வமா "சண்டைகோழி" வளர்ப்பானுங்க, அதுகூடவே வாழுவானுங்க, ஆனா அதுக்கும் எங்கையாவது சங்கம் இருக்கும் அதுக்கும் எவனாச்சும் தலைவரா இருப்பான்.
கபாடி விளையாட்டுன்னா நம்ம பயலுக உசிர பணயம் வைச்சு ஆடுவான், அத தவிர வேற ஒரு மண்ணும் தெரியாது, அந்த அளவுக்கு அதோட ஒன்றிபோயிருப்பான், விளையாட்டின் நுணுக்கம் அத்தனையையும் விரல் நுனியில் வைத்திருப்பான், அதுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலேயும் "அமைச்சூர் கபாடி கழகம்" வைச்சிருப்பானுங்க, அதுக்கு யாருடா நிர்வாகி..? யாருடா தலைவருன்னா..? நமக்கும் அவனுக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது.
இதையெல்லாம் தாண்டி எனக்கு தெரிந்து மட்டும் 250 விவசாய சங்கம் தமிழ்நாட்டுல நடக்குது (இன்னும் எத்தனை இருக்கோ தெரியாது) அதுலெயெல்லாம் எவனெவனோ தலைவரா இருக்கான், விவசாயத்தை பத்தி ஒன்னுமே தெரியாத பிராமணர்கள் கூட தலைவராக இருக்கிறார்கள், என் கண்ணுக்கு எட்டியவரை என் சாதிகாரர்கள் ஒருவர்கூட இந்த விவசாயிகள் சங்கங்களில் தலைவராக கிடையாது.
ஏன் நாம விவசாயமே பன்னலையா..?
விவசாயத்துக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லையா..?
விவசாயகூலிகளா நம்ம ஆளுங்க இல்லவே இல்லையா..?
அவங்களுக்கெல்லாம் பிரச்சனைகளே இல்லையா..?
இதையெல்லாம் ஏன் நாம் சிந்திப்பதே கிடையாது..? "சாதிக்குள்ளேயே சங்கம்" அதைதாண்டி வேறு விரிவான பார்வைக்கு நாம் எப்போதும் தயாராக இல்லையா..? இந்த சங்கத்துக்காரன் இப்படி பன்றான், அவன் அப்படி பன்றான்னு இங்கேயே நாம் நின்று நிதானமாக சண்டையிட்டு கொள்வதனால் என்ன லாபம்..? ஒவ்வொருவரும் தலைவராக ஆயிரம் வழிகள் இருக்கும்போது கிணற்று தவளைகளாக இருப்பதால்தான் எவனெவனோ நமக்கு தலைவராக அரிதாரம் பூச முடிகிறது.
** மாற்றி யோசியுங்கள்
- சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக