அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டு...!!
ஜல்லிக்கட்டுக்கு தடை, பிறகு அனுமதி,
மீண்டும் வழக்கு என்று பரப்பரப்பாக இருக்கும்
ஜல்லிக்கட்டுக்கும் முத்தரையர்களுக்கும் என்ன தொடர்பு என்பதை
இந்த நேரத்தில் சொல்வதுதானே சரியாக இருக்க முடியும்..?
உலகப்புகழ் பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு,
அந்த ஜல்லிக்கட்டை பொருத்தவரை யார் யாரோ உரிமை
கொண்டாடி அதை வரலாற்றில் பதியவைக்க
முயற்சிக்கிறார்கள், ஜல்லிக்கட்டுக்கு சிறிதும் தொடர்பற்றவர்கள் அது அவர்களின் வீர
விளையாட்டாக காண்பிக்க பகிரத முயற்சிகளை மேற்கொண்டு
இல்லாத ஆதாரங்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் இந்த விழாவை
ஆராவரம் இல்லாமல் அமைதியாக நடத்திக்கொண்டு இருக்கிறது வீர வலையர் வம்சம்,
அவர்கள் விளம்பரத்தை விரும்பவில்லை என்பதற்க்காக இதை ஆவணப்படுத்தாமல் நாம்
விட்டுவிட முடியாது அல்லவா..? அதற்காகதான் இந்த பதிவு.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின்
துவக்கத்தில் இருந்து என்ன நடக்கும்
என்பதை விளக்கவே இந்த பதிவு, முதலில் முத்தாலம்மன் கோவிலில் சாமி கும்பிடுவார்கள் முடிவில்
இந்த ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் அந்த கிராமத்தையே உருவாக்கிய கெங்கை வகையாறாக்களுக்கு
பரிவட்டம் கட்டுவார்கள், இதில் குறிப்பிட வேண்டிய
விசயம் பரிவட்டம்
கட்டப்படும் ஒரே வகையறா என்றால்
அது கெங்கை வகையறா குடும்பம்
மட்டும்தான் இவர்கள் முத்தரையர் சமூகத்தை
சேர்ந்தவர்கள், இந்த பரிவட்டம் கட்டிய
பிறகே ஜல்லிக்கட்டு விழா துவங்கும், அதேபோல
சாமியாக கும்பிடப்படும் முத்தாலம்மனும் வேறுயாரும் அல்ல அந்த அம்மனும்
முத்தரையர் குலத்தில் உதித்தவள்தான்.
ஜல்லிக்கட்டின் முதல்காளை முத்தாலம்மன் கோவில் காளை, இரண்டாவது
காளை கெங்கை (முத்தரையர்) வகையறா
காளை, மூன்றாவது காளை தாய் கிராம
காளை அதாவது வலசைகாளை வலசை
என்பது நூறு சதவீதம் முத்தரையர்கள்
மட்டுமே வசிக்கும் கிராமம் ஆகவே அது
யாருடைய காளையாக இருக்க முடியும்
என்று தனியாக குறிப்பிட வேண்டியதில்லை
என்று நினைக்கிறேன்.
இதன்பிறகே வேறு காளைகள் களத்திற்க்குள்
வரமுடியும், அதேபோல யார் வேண்டுமானாலும்
மாடு பிடிக்க முடியும் என்றாலும்
மாடு பிடிப்பவர்களில் பெரும்பங்கினர் முத்தரையர்களே, நீண்டகாலமாக அடக்க முடியாத காளைகளைகூட
அடக்கி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்து களத்திலேயே மாண்டுபோன
உண்டியல் என்கிற செந்திலின் வீரம்
இன்றும் அலங்கையின் காற்றில் கலந்தே நிற்கிறது. அலங்காநல்லூர்
மட்டுமல்லாமல் அருகாமையில் இருக்கும் பல கிராமங்களிலும் மாடுபிடிப்பதை
பெருமையாக கருதும் வீரகுலம் முத்தரையர்
குலம் ஆனாலும் இதை பெருமையாக
அவர்கள் எங்கும் சொன்னதாக எனக்கு
நினைவில்லை.
இவ்வளவு தூரம் ஜல்லிக்கட்டோடு
நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரே
ஒரு சமூகமாக நாங்கள் இருந்தாலும்
இதை குறுகிய வட்டத்துக்குள் அடக்கிவிட
தயாராக இல்லை அதனால்தான் "தமிழனின்
வீர விளையாட்டாக" இதனை "தமிழனின் பாரம்பரியமாக" இதனை வெளியில் பெருமிதப்படுத்துகிறோம்.
இந்த ஆவணப்படுத்துதல் கூட
"தமிழனின் பாரம்பரியமாக" மட்டுமே இதை உலகம்
புரிந்துகொண்டிருந்தால் அவசியமிருந்திருக்காது, வேறு சில சமூகங்களின்
அடையாளமாக உலகம் புரிந்துகொள்ள முயலும்போது
ஆவணப்படுத்துதல் அவசியமாகிறது.
நன்றியுடன்..
சஞ்சய்காந்தி
அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம்
சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக