திங்கள், 28 மார்ச், 2016

முத்தரையர் சாதிக்கு யார் தலைவர்...?

முத்தரையர் சாதிக்கு யார் தலைவர்...?


நீண்டநாளாகவே இந்த விசயத்தை எழுத நினைத்தேன், இருந்தாலும் என்னால் ஒரு பிரச்சனை/ பிரிவு முத்தரையர் சமூகத்தில் வந்துவிடக்கூடாது என்பதனால் முடிந்தளவு தவிர்த்து வந்தேன், அதுவும் இல்லாமல் நான் ஒரு அரசியல் கட்சியில் வேறு என்னை இணைத்துக்கொண்டிருப்பதால் இப்படியான தவறுகளை சுட்டிக்காட்ட கூடாது என்றும் கருதினேன் ஆனால் இன்று இந்த செய்தியை பார்த்தபிறகும் நான் அமைதியாக இருந்தால் என் சமூகத்திற்க்காக பேசும் தகுதியை இழந்துவிடுவேன் ஆகவே என்னுடைய கடமையை நான் செய்கிறேன்.

யார் இவர்கள்..?
தேர்தல் வந்தால் போதும் புற்றீசல்கள் போல புதிதுபுதிதாக நூற்றுக்கணக்கான சங்கங்கள் / அமைப்புகள் இந்த சாதியில் மட்டும் முளைத்துவருகிறது, வரட்டும் யார் வேண்டுமானாலும் வரட்டும், வர வேண்டாம் என்று யாரையும் யாரும் தடுக்க முடியாது, ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் முளைத்துவருவதை எப்படி கண்டும் காணாமலும் போக முடியும் ?

அதேபோலவே சென்னையை சுற்றி இருக்க கூடிய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இருந்து தலைவர்களாக உதித்து வந்தவர்களின் மனசாட்சியிடம் கேட்கிறேன், எந்த அடிப்படையில்ஒட்டுமொத்த முத்தரையர் சமூகத்தின் பிரதிநிதியாக நீங்கள் தேர்தல் நேரத்தில் உதித்து வருகிறீர்கள்..? கடந்த பத்தாண்டுகளின் அதுகூட வேண்டாம் கடந்த ஐந்தாண்டுகளின் முத்தரையர் சமூகத்திற்காக நீங்கள் எத்தனை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கிறீர்கள் ? இந்த சமூகத்திற்க்கு பயனுள்ள வகையில் எந்த அரசியல் கட்சியிடம் என்ன மாதிரியான கோரிக்கையை வைத்து இதுவரை நிறைவேற்றி இருக்கிறீர்கள் ? இதுவரை சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் இந்த சாதிக்காக பேச வைத்திருக்கிறீர்கள் ? இது எதுவுமே செய்யாமல் என்ன தைரியத்தில் "முத்தரையர்" என்ற பெயரை பயன்படுத்தி அரசியல் கட்சிகளை ஆதரிக்கிறீர்கள் ?

திருச்சியில் இயங்கும் முத்தரையர் சங்கங்கள் குறிப்பாக அய்யா R.V. யின் முத்தரையர் முன்னேற்ற சங்கம், அண்ணன் K.K.S.ஸின் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கங்களை நான் பலமுறை விமர்சித்து இருக்கிறேன், காரணம் அவர்களின் செயல்பாடுகளில் இருக்கும் சிற்சில குறைகள், மற்றப்படி அவர்கள் மக்களோடு நேரடியாக தொடர்பினை வைத்திருக்கிறார்கள், அவர்கள் பிரச்சனைகளை முடிந்தளவு தீர்க்க முயற்சிக்கிறார்கள் அதனால் அவர்கள் செய்யும் பல செயல்களில் சில தவறுகள் நேருவது இயல்பு, அதை சுட்டிக்காட்ட வேண்டியது எனது பொருப்பு, ஒருவேளை இவர்களும் செயல்படாமல் இருந்தால் இவர்கள் மீது நான் உட்பட யாருமே விமர்சனங்களை வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

உண்மையில் சென்னையை சுற்றி இருக்கக்கூடிய தலைவர்கள், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் எந்த அரசியல் கட்சியாவது உங்களை நாடி வந்தால், நீங்கள் செயல்பாட்டில் இருக்கும் சங்கங்களை சுட்டிக்காட்டிவிட்டு ஒதுங்கி இருந்திருக்க வேண்டும், ஆனால் சில லட்சங்களை வீசி எறிவார்கள் என்பதற்காக என் சாதியை அடமானம் வைக்கும் உங்களை போன்ற சமூகத்திற்க்கு எதிரானவர்களை என்ன செய்வது..?
யார் இந்த காடக முத்தரையர் ?

இதுவரை இந்த சாதிக்காக இவர் செய்தது என்ன ?

எந்த அடிப்படையில் அதிமுகவை ஆதரிக்கிறார் ?

2011 ம் ஆண்டும் இவர் அதிமுகவை ஆதரித்தாரே..., அப்போது ஏன் இந்த கோரிக்கைகளை வைக்கவில்லை ?

இந்த கோரிக்கையை 2011 ஆம் ஆண்டும் வைத்திருந்தால் ஏன் அதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ?

அதிமுகவுக்கும் முத்தரையர் சமூகத்திற்க்குமான மிகப்பெரிய போராட்டம் புதுக்கோட்டையில் நடந்தபிறகும் இவர் யார் எனது சாதி பெயரை பயன்படுத்தி அதிமுகவை ஆதரிக்க ?

முத்தரையர் சமூக மக்களே புரிந்துக்கொள்ளுங்கள், இவர்கள் எல்லாம் இந்த சமூகத்தை தொடந்து விலைபேசி உயிர்வாழ்பவர்கள், இவர்களால் ஒருபோதும் இந்த சமூகத்திற்க்கு வரும் ஆபத்துகளில் இருந்தோ, அச்சுருத்தல்களில் இருந்தோ காக்க முடியாது, இவர்கள் நிச்சயமாக உங்களுக்கான தலைவர்கள் கிடையாது.

சரியான தலைமை எது என்பதை நீங்களே தீர்மானியுங்கள், தேர்தல் நேரத்தில் ஆதயத்திற்காக வருபவர்களை துரத்தியடியுங்கள்.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக