வெள்ளி, 30 செப்டம்பர், 2016

பேராவூரணித் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் திரு .குழ .செல்லையா அவர்கள் 15.03.73 இல் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை

பேராவூரணித் தொகுதிச்  சட்டமன்ற  உறுப்பினர்  திரு .குழ .செல்லையா  அவர்கள்  15.03.73 இல்  சட்டமன்றத்தில்  ஆற்றிய  உரை

சொல்லருவி குழ செல்லையா அவர்கள் சட்டப்பேரவையில் முழங்கியது.சட்டமன்ற உரைகளையெல்லாம் பொழுதுபோக்கிற்காக போடவில்லை அதற்கான நீண்ட காரணங்களை பிறிதொரு நாளில் பதிவிடுகிறேன்.

நமது சமுதாய யுவன்களும்,யுவதிகளும்,அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான் இங்கு பதிவிடுகிறோம் .
இதை அதிகமான நம் சமுதாய நண்பர்கள் பகிரவும் நன்றி.

இப்படிக்கு : PALANIVELU  SANGILIDEVAN .

துணைத்  தலைவர்  அவர்களே ! தமிழ்நாட்டு  மக்களை  பொறுத்தவரை  நாலைந்து  பகுதிகளாக  நாம்  பிரித்திருக்கிறோம்  .பிற்பட்டோர்  என்றும் ,மிகவும்  பின்தங்கியவர்கள்  என்றும் , தாழ்த்தப்பட்டோர்  என்றும்  பல்வேறு  வகையாகப்  பிரித்திருக்கிறோம் . ஆனால்  உண்மையிலே  நாட்டில்  இருக்கும்  பின்தங்கிய  மக்களுக்கு  ஒதுக்கப்பட்டு  இருக்கும்  சலுகைகள்  சரியான  முறையில்  கிடைத்திருக்கின்றனவா  என்பதைக்  கவனமாகப்  பார்க்க  வேண்டும் .
பிற்பட்டோர்  நல ஆணைக்குழு  தமிழ்நாடு  முழுவதும்  சுற்றிப்பார்த்து , அவர்கள்  எல்லாம்  நேரடியாகச்  சந்தித்துக்   கேட்டறிந்த தகவல்களைக்   கொண்டு  அரசுக்கு  அனுப்பிய  பரிந்துரையில்  110 விதமான  திட்டங்களை  கூறியிருக்கிறது . அந்த  110 வகையான  திட்டங்களில்  17 வகையான  திட்டங்களைத்தாம்  அரசு  ஏற்றுக்  கொண்டிருப்பதாகத்  தெரிய  வருகிறது . அவர்கள்  சொன்ன  மற்றது  திட்டங்களையும்  அரசு  ஏற்று கொண்டுஇருப்பதாகத்  தெரிய  வருகிறது . அவர்கள்  சொன்ன  மற்றது  திட்டங்களையும்  அரசு  ஏற்று  செயல்படுத்த  முன்வர  வேண்டுமென்று  கூறக்  கடமைப்பட்டிருக்கிறேன் . அப்படி  எல்லாவற்றையும்  ஏற்று  செயல்  படுத்தினால்  தான் உண்மையிலே  மிகப்  பின்  தங்கிய  வகுப்பை  சேந்த  மக்கள்  விடப்பட்டிருக்கிறார்கள் . குறிப்பாக  தஞ்சை  மாவட்டத்தில்  அந்தப்  பகுதியில்  முத்துராஜா  வகுப்பை  சார்ந்த  மக்கள் , பிரதிநிதிகள்  இல்லாமல் ,குறைகளை  எடுத்துச்  சொல்வதற்கான  வாய்ப்பு  இல்லாமல்  இருக்கிறார்கள்  .

மாண்புமிகு  முதல்வர்  அவர்கள்  1957 இல்  குளித்தலைப்  பகுதியில்  நின்று  வெற்றி  பெற்றிருக்கிறார்கள் . அவர்களை  அனுப்பிய  அந்த  மக்களில்  முத்துராஜா  சமுதாயத்தைச்  சார்ந்த  மக்கள்  தாம்  அதிகமாக  வாக்களித்து  மாண்புமிகு  முதல்வர்  அவர்களை  அனுப்பினார்கள்  என்பதில்  பெருமையும்  பூரிப்பும்  கொள்கிறோம் . அந்த  மக்களை  பற்றி  முதல்வர்  அவர்கள்  நன்கு  அறிவார்கள் . அந்த  மக்கள்  தமிழகத்தில்  80  லட்சத்திலிருந்து  ஒரு  கோடி  வரையில்  இருக்கிறார்கள்  என்பதை  இந்கு  எடுத்துச்  சொல்ல  நான்  கடமைப்பட்டு  இருக்கிறேன் .
குறிப்பாகத்  தஞ்சை ,ராமநாதபுரம் ,கோவை ,வட ஆர்க்காடு  போன்ற  மாவட்டங்களில்  உள்ள  பல்வேறு  பகுதிகளில்  பல்வேறு  பெயர்களைக்  கொண்டு  இந்த  முத்துராஜா  குல  மக்கள்  வாழ்ந்து  வருகிறார்கள் . திருச்சியைப்பொறுத்த  வரையில்  முத்துராஜா  என்றும் ,முத்தரையர்  என்றும்  இப்படி  பல்வேறு  பெயர்களில்  வாழ்ந்து  வருகிறார்கள் . தஞ்சை  மாவட்டத்தை  எடுத்துக்கொண்டால்  முத்துராஜா  என்றும் ,அம்பலகாரர்  என்றும்  ,வலையர்  என்றும் ,மீனவர்  என்றும் ,பூசாரிகள்  என்றும்  இப்படி  பல்வேறு  பட்டப்பெயர்களில்  இருந்து  கொண்டிருக்கிறார்கள் . அவர்களது  சர்டிபிகேட்டுகளைப்  பார்த்தல்  முத்துராஜா   என்று  போடப்பட்டு  இருக்கும் .மதுரை  மாவட்டத்தை  எடுத்துக்  கொண்டால்  கண்ணப்பர்  குல  மக்கள்  என்று  போட்டுக்  கொண்டிருக்கிறார்கள் . இப்படி  பல்வேறு  மாவட்டங்களில்  பல்வேறு  பகுதிகளில்  பல  உட்பிரிவாக  இந்த  முத்துராஜா  குல  மக்கள்  வாழ்ந்து  வருகிறார்கள்  இந்தச்  சமுதாய  மக்கள்  80 லச்சத்திருக்கு  மேல்  ஒரு  கோடி  வரையில்  தமிழ்நாட்டில்  இன்றைய  தினம்  வாழ்ந்து  வருகிறார்கள் .இப்போது  பின்தங்கிய  வகுப்பினர் ,மிகவும்  பின்தங்கிய  வகுப்பினர்  என்று  பிரிக்கப்பட்டுச்  சலுகைகள்  வழங்கப்பட்டு  வருகின்றன . இப்படிப்பட்ட  சலுகைகளை  வழங்கும்போது  நான்  ஏற்கனவேய  குறிப்பிட்டது  போல  மிகவும்  பின்தங்கிய  பொருளாதாரத்  துறையில்  ,கல்வித்துறையில் ,தொழில்துறையில்  மிகமிகப்  பின்  தங்கிய  மக்களுக்குத்  தாம்  அவர்களுக்கான  சலுகைகள்  கொடுக்கப்பட  வேண்டும் . ஆகவே  ,இன்று  அரசு  சலுகைகள்  வழங்குகின்ற  காரணத்தால்  உயர்ந்த  வகுப்பார்  கூடாது  தங்களை  எந்த  விதத்திலாவது  பின்தங்கிய  வகுப்பினர்  பட்டியலில்  சேர்த்துவிடக்  கூடாதா  என்று  எப்படியோ  தங்கள்  அதிகாரத்தைப்  பயன்படுத்தி , தங்களுடைய  செல்வாக்கைப்  பயன்படுத்திப்  பின்தங்கிய  வகுப்பினர்  பட்டியலில்  சேர்க்கப்பட்டு  அந்தச்  சலுகைகளை  பெற்று  வந்துவிடுகிறார்கள் . தமிழ்நாட்டில்  80 லத்திலிருந்து  ஒரு  கோடி  வரி  முத்துராஜா  குல  மக்கள்  இருக்கிறார்கள்  என்று  ஏற்கனவே  சொல்லி  இருக்கிறேன் . அவர்களில்  10 சதவீதம்  varai தவிர  மற்ற  அத்துணை  பேர்களும்  கூலிவேலை  செய்து  பிழைக்கக்   கூடிய  நிலையில்  தான் இருக்கிறார்கள்

குறிப்பாக  ஆதி  திராவிட  மக்களை  எந்த  அளவில்  மதிக்கிறார்களோ , அந்த  அளவிற்குத்  தான்  இவர்களையும்  மதிக்கிறார்கள் . அவர்களை  எந்த அளவிற்கு  வைத்திருக்கிறார்களோ  அந்த  அளவிற்க்குதான்  இவர்களும்  வைக்கப்பட்டிருக்கிறார்கள் . தஞ்சை  மாவட்டமானாலும்  சரி ,மதுரை  மாவட்டமானாலும்  சரி ,திருச்சி  மாவட்டமானாலும்  சரி ,கோவை  மாவட்டமானாலும்  சரி  இந்த  முத்துராஜா  இன  மக்கள்  மிகப்  பின்தங்கிய  முறையில்  வாழ்கிறார்கள்   நல்ல  உடை  உடுக்க  முடியாமல்  நல்ல  தொழில்  செய்து  பிழைக்க  வழியில்லாமல்  தனியார்  நிலங்களில்  கூலிவேலை  செய்து  நிலத்தைக்  குத்தகைக்கு  உழுதுகொண்டிருக்கிறார்கள் .பண்ணையாளர்களிடம்  பரம்பரையாக  அடிமைகளைப்போல  இருந்து  பணியாற்றிக்க  கொண்டிருக்கிறார்கள் , வேலை  செய்து  கொண்டிருக்கிறார்கள்  என்பதைத்  தெரிவித்துக்  கொள்ள  நான்  கடமைப்பட்டிருக்கிறேன் . எனவே  இந்த  முத்துராஜா  குல  மக்களுக்கு  தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு  அழைக்கப்படுகிற  சலுகைகள் ,மருத்துவக்  கல்லூரியில்  இடங்கள்  ஒதுக்குவது  போன்ற  பிற  சலுகைகளை ,தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு  அழைக்கப்படுகின்ற   எல்லாச்  சலுகைகளையும்  இந்த  முத்துராஜா  குல  மக்களுக்கு  அளிக்க   வேண்டுமென்று  கேட்டுக்  கொள்ள  நான்  கடமைப்பட்டு  இருக்கின்றேன் .

அடுத்து  மாண்புமிகு   உறுப்பினர்கள்  எடுத்துக்  காட்டியதைப்போல  IAS,IPS போன்ற  தேர்வுகளில்  பின்தங்கிய  வகுப்பைச்  சார்ந்த  மக்களுக்கு  வெற்றி  கிடைப்பது  முடியாத  காரியமாக  இருக்கிறது . ஜில்லாக் கலக்டர் , மற்ற  IAS போன்ற  பதவிகளுக்கு  அவர்களின்  பிள்ளைகள்  என்று  பாரம்பரியமாக   வருகிறதே  தவிர  பின்  தங்கிய  வகுப்பினருக்கு  கிடப்பது  இல்லை . கடந்த  ஆண்டு  பிற்பட்ட  நல ஆணைக்குழு  பரிசீலனை  செய்து  ஒரு  பட்டியலை  வெளியிட்டிருக்கிறது . ஒரு  கோடி   மக்கள்  தொகைக்கொண்ட  இந்த  முத்துராஜா  குல  மக்களில்  மொத்தம்  இதுவரை  படித்துப்  பட்டம்  பெற்றுள்ள  பட்டதாரிகள்  50 பேர்கள்  தாம்  இருக்கிறார்கள்  என்று   எடுத்துக்  கூறி  இருக்கிறார்கள் . என்ஜினீயர்கள்  ஒரு  லட்சம்  பேரில்  இந்தச்  சமுதாயத்தைச்  சேர்ந்தவர்கள்  10 பேர்கள்  தாம்  இருக்கிறார்கள்  என்று  சுட்டிக்காட்டி  இருக்கிறார்கள் .டாக்டர்கள்  5 பேர்கள்தாம்  இருக்கிறார்கள்   என்று  காட்டி  இருக்கிறார்கள் ,கால்நடை  மருத்துவர்  ஒருவர்தான்  இருக்கிறார் . இப்படி  மொத்தமாக  66 பேர்கள்  தாம்  பல்வேறு  துறைகளில்   இருக்கிறார்கள் . இதை  அமைச்சர்  பெருமக்கள்  எண்ணிப்பார்க்க  வேண்டும் . ஒரு  கோடி  மக்கள்  தொகையைக்  கொண்ட   ஒரு  சமுதாயத்தில்  இருந்து   இவ்வளவு
பேர்கள்  தாம்  பல்வேறு   துறைகளில்  பணியாற்றி  கொண்டு  இருக்கின்றார்கள் . ஆகவே  எந்த  அளவிற்குப்  பிற்போக்கான  தன்மையில்  இந்த  மக்கள்  இருக்கிறார்கள்  என்பதை   எண்ணிப்பார்க்கவேண்டும் . கல்வித்துறையில்  ,பொருளாதாரத்துறையில்   ,தொழில்துறையில்   மற்றச்  சமுதாயத்தினரோடு  வாழத்தக்க  முறையில்   அவர்களின்  நிலைக்கு  உயரத்தக்க  முறையில்  இந்த  முத்துராஜா  குல  மக்களுக்கு , அத்தனை  சலுகைகளையும்  வழங்க  வேண்டும்  என்று  கேட்டுக்  கொள்கிறேன் .மிக  மிகப்  பின்தங்கிய  தாழ்த்தப்பட்ட   வகுப்பு  மக்களுக்கு  என்னென்ன  சலுகைகள்  அளிக்கப்படுகின்றனவோ  அத்தகைய  சலுகைகள்  எல்லாம்  இந்த  முத்துராஜா  குல  மக்களுக்கும்  ஒதுக்கித் தரப்பட  வேண்டுமென்று  கேட்டுக்கொண்டு  என்  உரையை  முடிக்கிறேன் .
இந்த  கட்டுரையை  வெளியிட்டது : சென்னை  மாவட்ட  முத்துராஜா  கலைக்கழகம் . கழகத்திற்கு நன்றி .

Thanks to : பழனிவேலு சங்கிலிதேவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக