கள்ளர் சமூக உறவுகள் மட்டுமல்ல,
" வலையர்கள் முத்தரையர்களா...? " என்ற கேள்வியை யார் எழுப்பினாலும் அதற்கான பதிலைத் தருவதற்கான தார்மீக உரிமை எங்களுக்குண்டு, உங்களின் கேள்விக்கான பதிலைத் தரவும் உங்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும் நாங்கள் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறோம்.... கல்வெட்டோ, பட்டயமோ, கரைப் பெயரோ, கடவுள் வழிபாடோ, முத்தரைய மன்னர்களுடனான தொன்மத் தொடர்பிற்கான நிகழ்காலத்திய சான்றுகளோ... நீங்கள் எதைக் கேட்டாலும் அத்தனையையும் தருவதற்கு நாங்கள் தயார்...!
ஆனால் சோழர் தொடர்பாக வன்னியர்களுடன் மல்லுக்கட்ட கள்ளர்கள் ஒரு பதிவை எழுதிவிட்டு, போகிற போக்கில் அந்தப் பதிவில் தஞ்சைக்கும் முத்தரையருக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்புவதும், அதற்கு பதில் தந்தவுடன் 'அட முத்தரையரே கள்ளர்தானப்பா, வலையனுகளுக்கு முத்தரையரோடு என்னப்பா தொடர்பு... ' என்றும் பல்டி அடிப்பதும் வியப்பாக இருக்கிறது..
வலையர்களே முத்தரையர்கள் என்பதற்கான சான்றுகளை ஏற்கனவே பலமுறை கொடுத்தாயிற்று, மேலும் வேண்டுமானலும் நாங்கள் தருகிறோம், ஆனால் முத்தரைய மன்னர்களை உரிமை கொண்டாட முயலும் கள்ளர் உறவுகள் தயவுசெய்து 'நானா மூனா நாட்டார் எழுதிருக்கார், நானா மூனா நாட்டார் எழுதிருக்கார் ' என்றும், முத்தரையர் பட்டம் எங்களுக்கு இருக்கிறது என்றும் கூப்பாடு போடாமல் ஏதாவது உருப்படியான சான்றுகளைத் தாருங்கள்....
ஏனென்றால் வேங்கடசாமி நட்டாருக்கு கடந்த நூற்றாண்டில் "கள்ளர் சரித்திரம் " என்ற நூலை எழுதுவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதும்? அதிலும் குறிப்பாக தென்பகுதி தன்னரசுக் கள்ளர்களையும், பிறமலைக் கள்ளர்களையும் காட்டிலும் தஞ்சைக் கள்ளரை உயர்த்திப் பிடிக்க வேண்டியதற்கான அவசியம் நாட்டாருக்கு ஏன் ஏற்பட்டது என்பதையும் முதலில் கள்ளர்கள் உணர வேண்டும்.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் கள்ளர் சமூகத்தின் மீது வெள்ளையர்களால் தீவிரமான முறையில் திணிக்கப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கொடூரத்திலிருந்து "தஞ்சைக் கள்ளர்கள்" தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதற்காகவே சில மன்னர்களோடும், புகழ் வாய்ந்த ஆன்மிக அறச்செயலாளர்களுடனும் தங்களை ஒப்பிட்டு 1920களுக்குப் பிறகு புத்தகங்களை எழுதி அதை வெள்ளையர்களிடத்தில் ஆவணமாகச் சமர்ப்பித்து அந்த சட்டத்திலிருந்து தம்மை தப்பிவித்துக் கொண்டனர் என்பது வரலாறு...
எந்த அடிப்படை ஆதாரங்களுமின்றி முத்தரைய மரபினரையும், முத்தரைய வேந்தரான திருமங்கை ஆழ்வாரையும் கள்ளர் சாதியாக உருவகப்படுத்த வேண்டிய அவசியம் இதன் காரணமாகவே வேங்கடசாமி நாட்டாருக்கு ஏற்பட்டது என்பதை அக்கால அரசியல் குறித்து ஊன்றிப் படிப்போரால் எளிதாக உணர முடியும்...
கள்ளர் சமூகத்தைப் பற்றி நீண்ட ஆய்வினை மேற்கொண்டுவரும் திரு முகில்நிலவன் அவர்களின் 'தமிழ் இலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர்' புத்தகத்தின் கட்டுரை மட்டுமல்லாது அண்ணன் சுந்தரவந்தியத் தேவனின் “பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்" நூலிலும் (பக்க எண்: 650) தெளிவான முறையில் நான் மேற்சொன்ன தகவல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (ஆய்வாளர்கள் முகில்நிலன் , சுந்தரவந்தியத்தேவன் போன்றவர்களெல்லாம் எந்த சமூகம் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!)
எனவே கள்ளர் உறவுகள் ஒரு தமிழ் மன்னனாக பெரும்பிடுகரைக் கொண்டாடுவதில் எந்தத் தவறுமில்லை, ஆனால் அவர் அந்த சாதியல்ல இந்த சாதி என்பதும், புனைவு வரலாற்றின் பெயரால் வலையர் மக்களை வம்புக்கு இழுப்பதும் தேவையற்ற செயல் என்பதை இனிமேலாவது உணர்ந்து உண்மை வரலாற்றை மட்டும் பதியுமாறு முத்தரையர்களின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறோம்..
18 கருத்துகள்:
முத்தரையர் ஒரு பட்டம். அது வலையருக்கும் இருந்ததே தவிர வலையர் மட்டுமே முத்தரையர் என்பது மிகவும் தவறான கண்ணோட்டமாகும்.
பரதவகுல முத்தரையர், மறவ முத்தரையர், கள்ள முத்தரையர்,முத்தரைய ராவ், முத்திரிய நாயுடு, பள்ளி முத்தரையர், எனப்பல சான்றுகள் உண்டு. எந்த ஆதாரமும் இல்லாமல் யாரும் கோரமாட்டார்கள். திருமங்கையாழ்வார் அச்சுஅசலாக கள்ளர் என்று சொல்லும் கல்வெட்டு உள்ளதே தவிர வலையர் என சொல்லும் கல்வெட்டு இல்லை. சேந்தன்குடி வழுவாட்டித்தேவர் வகையறாக்கள் தம்மை முக்குலத்தோர் என்றுதான் சொல்கிறார்கள். அவர்களுக்கும் முத்தரையர் பட்டமுள்ளதை அறியலாம். இந்த ஜமீன் தவிர, முத்தரையர் செப்பேட்டை ஊன்றி கவனித்து புரிதலுடன் படித்தால். . சிவகிரி, ஏழாயிரம் பண்ணை, அழகாபுரி,சிவகங்கை, வேப்பங்குளம், சமுசிகாபுரம், ராமநாதபுரம், பேராம்பூர், முதலான முக்குலத்தோர் ஜமீன்கள் வன்னிமுத்தரையர் எனக்குறிப்பிடுவதைக்காணலாம்.
முத்தரையர் ஒரு பட்டம். அது வலையருக்கும் இருந்ததே தவிர வலையர் மட்டுமே முத்தரையர் என்பது மிகவும் தவறான கண்ணோட்டமாகும்.
பரதவகுல முத்தரையர், மறவ முத்தரையர், கள்ள முத்தரையர்,முத்தரைய ராவ், முத்திரிய நாயுடு, பள்ளி முத்தரையர், எனப்பல சான்றுகள் உண்டு. எந்த ஆதாரமும் இல்லாமல் யாரும் கோரமாட்டார்கள். திருமங்கையாழ்வார் அச்சுஅசலாக கள்ளர் என்று சொல்லும் கல்வெட்டு உள்ளதே தவிர வலையர் என சொல்லும் கல்வெட்டு இல்லை. சேந்தன்குடி வழுவாட்டித்தேவர் வகையறாக்கள் தம்மை முக்குலத்தோர் என்றுதான் சொல்கிறார்கள். அவர்களுக்கும் முத்தரையர் பட்டமுள்ளதை அறியலாம். இந்த ஜமீன் தவிர, முத்தரையர் செப்பேட்டை ஊன்றி கவனித்து புரிதலுடன் படித்தால். . சிவகிரி, ஏழாயிரம் பண்ணை, அழகாபுரி,சிவகங்கை, வேப்பங்குளம், சமுசிகாபுரம், ராமநாதபுரம், பேராம்பூர், முதலான முக்குலத்தோர் ஜமீன்கள் வன்னிமுத்தரையர் எனக்குறிப்பிடுவதைக்காணலாம்.
எழுதியவனுக்கு தான் மூளை இல்லை என்றால் உங்களுக்குமா. உங்களிடம் ஒரே கேள்வி, குற்றப்பரம்பரை யில் கள்ளர் இருந்தார்கள் அதனால் கதை எழுதினார்களா. தஞ்சை கள்ளர்கள் அதில் பாதிக்கப்பட்டனரா முதலில்? இரகுநாத இராசாளியார் இரண்டாம் ஜார்ஜ் மன்னர் கேட்டதால் அது தஞ்சையில் நடைமுறை படுத்தவில்லை . இதை கேட்டு வாங்கிய 1920 ல் இராசாளியார் இறந்து விட்டார். நாட்டார் புத்தகம் வெளியிட்டுள்ள ஆண்டு 1921. அப்போது தஞ்சையில் இந்த சட்டம் செயல்படவில்லை. சாதாரண ஒரு கேள்வி, ஒரு முட்டலுக்கு கூட தெரியும், புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் கள்ளர் என்று. சிவகங்கை கள்ளர் நாட்டு அம்பலகாரர்கள் ஒரு சிரிய மன்னர் போல தான். இவர்கள் திருடன் என்றால் இவர்கள் எப்படி ஆட்சி செய்தார்கள். இவர்கள் கள்ளர் திருடர்கள் என்றால் இவர்களுக்கு கீழே வேலைபார்த்த வலையர், பறையர், போன்ற பல சாதிகள் இன்னும் கேவலமானவர்கள் அல்லவா. முத்தரையர் பட்டம் பலருக்கு இருப்பதால் விவாதம் செய்யலாம் அது தவறு கிடையாது ஆனால் இவனோ கிறுக்கன் கிறுக்கியதை வைத்து பேசுவது பெரும் முட்டாள் தனம்.
கள்ளன் மன்னரா?
சில தற்குறிகளின் கேள்விகள் கள்ளன் என்றால் திருடன், திருடன் எப்படி மன்னன் ஆகமுடியும்.
சரி இவர்கள் சொல்வது போல திருடன் மன்னன் ஆகமுடியாது, ஆனால் மன்னன் எல்லோரும் திருடனாக தான் இருக்கிறார்கள்.
சீவகசிந்தாமணியில் 741ம் செய்யுளில் உச்சிமேற்புலவர் நச்சினார்கினியர் மற்றும்
தமிழ் தாத்தா ஊ.வே. சாமிநாத ஐயர் கள்ளர் என்றால் அரசன் என்பதை தெளிவாக சொல்லியுள்ளார். மேலும் நாம் நிறைய ஆதாரங்கள் தந்தாகிவிட்டது. ஸ்ரீ கள்வர் கள்வ ராஜராஜன் என்பவன் பேரரசனே.
உலகத்தில் வெற்றி கொண்ட மன்னர்கள் முதலில் செய்வது அந்த நாட்டின் செல்வங்களை கொள்ளையடிப்பது. அந்த செல்வங்களை வைத்து கோயில், கோட்டைகள் கட்டுவது. இதுக்கு பெயர் திருட்டு என்று சொல்வது இல்லை. அவன் எவ்வளவு கொள்ளையடித்து வருகின்றானோ அதுவே அவன் வெற்றியின் அளவு அதுவே வரலாறு.
ஆனால் தங்களை மன்னர் பரம்பரை என்று சொல்கின்றவர்களின் மன்னர்கள்
ரொம்ப நல்லவர்கள், அவர்கள் திருடவோ, கொள்ளையில் ஈடுபடவில்லை.
அந்த மன்னர்கள் வயலில் வேளை செய்தார், மக்களிடம் குறைந்த வரிவசூலித்தார், பிறநாடுகளைக் வென்று வெறும் கையுடன் கொடியை மட்டும் அங்கே நட்டு விட்டு திரும்பி வந்தார்கள். இதில் அவர்களது சொந்த பணத்தை கொண்டு கோயில், கோட்டை கட்டினார்.
தம்பிமாரே கோட்டை இல்லை கோட்டை கதவுகள் கூட கட்ட முடியாது.
வீரர்கள் மற்ற நாட்டில் செய்யும் கொள்ளை, திருட்டை சங்க இலக்கியத்தில் பெருமை பேசுகிறது.
“நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு
இறங்குகதிர்க் கழனிநின் இளையரும் கவர்க.
நனந்தலைப் பேர் ஊர் எரியும் நைக்க
நின் நெடுவேல் ஒன்னார் செகுக்கினும் செகுக்க”
என்று பாண்டியன் நன்மாறனைக் காரிக்கண்ணனார் புறநானூறு 57இல் பாடுகிறார். “நீ பிறர் நாட்டைக் கைப்பற்றும்போது, உன் இளைஞர்கள் அவர் நாட்டுக் கழனிகளைக் கொள்ளையடிக்கட்டும். பெரிய ஊர்களைக் கொளுத் தினாலும் கொளுத்தட்டும். உன் வேலும் பகைவரைக் கொன்றாலும் கொல்லட்டும்” என்று சொல்வது போர்க் குற்றங்கள் இயற்றுவதைப் பாராட்டும் செயலே ஆகும்.
போர்த் தொடக்கத்தின்போது கவர்ந்து வரப்பட்ட கால்நடைகள் இறுதியில் வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. பகைப்புலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்திலும் பங்களிக்கப்பட்டது. வெற்றிபெற்ற வீரர்களுக்குப் பொற்பூக்கள் வழங்கப்பட்டன. இறையிலி நிலங்களும் வழங்கப் பட்டன
போர்க்குடியில் பிறந்தவர்களுக்கும், முத்தமிழையும் கற்றுணர்ந்த அறிஞர்களுக்கு மட்டுமே தெரியும் கடந்த நூற்றாண்டு முன்பு வரை களவு என்பது போரின் ஒரு முறை, அது ஒரு திணை.
புறத்திணையை 7 வகையாகத் தொல்காப்பியமும், 12 வகையாகப் புறப்பொருள் வெண்பாமாலையும் தொகுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் ஒன்று வெட்சித் திணையாகும். ஒரு நாட்டின் வீரர் தன் அரசன் ஆணைப்படி சென்று பகை நாட்டினரின் பசுக்கூட்டங்களை (ஆ நிரைகளை) கவர்ந்து வந்து காத்தல் இத்திணையாகும்
புறத்திணைகளுள் வெட்சிக்கு அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, கரந்தைத் திணையாகும். பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும்.
"வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்"
முக்குலத்தோர் வீர வரலாறு. சோழ, பாண்டிய, பல்லவ, முத்தரைய, சேர மன்னர்கள் இவர்கள் என்று எங்கும் நிறுவவில்லை. ஆனால் இவர்கள் முக்குலத்தோர் என்று தெளிவாக உள்ளது
* மன்னர் திருமலை ரெகுநாத சேதுபதி
* மன்னர் ஆவுடை ராயத் தொண்டைமான்
* மன்னர் இரகுநாத கிழவன் சேதுபதி
* மன்னர் இரகுநாதராய தொண்டைமான்
* தளபதி வீர தளவாய் வயிரவன் சேர்வை
* மன்னர் பூலித்தேவர்
* மன்னர் வாண்டாயதேவர்
* மன்னர் சசிவர்ம பெரிய உடைய தேவர்
* மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி
* மன்னர் முத்துவடுகநாத தேவர்
* ராணி வேலுநாச்சியார்
* மன்னர் மருது பாண்டியர்கள்
* தளபதி மயிலப்பன் சேர்வைகாரர்
* மன்னர் வாளுக்கு வேலி அம்பலம் மற்றும் கள்ளர் நாடு அம்பலகாரர்கள்
* சிங்கம்பட்டி மன்னர் பெரியசாமி தேவர் (தூக்குத் துரை தேவர் )
* தளபதி வெள்ளைய தேவன்
* கருப்பசேர்வை
* சின்ன மருது மகன் துரைச்சாமி
* போராளி பெருநாழி ரணசிங்கம்
* வரி கட்ட மறுத்து உயிர் விட்ட 6000 வெள்ளலூர் நாட்டு கள்ளர்கள்
* வெள்ளையர்களுக்கு எதிராக உயிர் விட்ட மாயக்காள் மற்றும் தன்னரசு நாட்டு கள்ளர்கள்.
* ஒற்றன் இராமு தேவர் ( நேதாஜி தேசிய படை)
* தளபதி ஜானகி தேவர் (நேதாஜி தேசிய படை)
* வாய்பூட்டு சட்டம் போட்டு அடக்க நினைத்த ஐயா முத்துராமலிங்க தேவர்
* போராளி வாட்டாகுடி இரணியன்
மேலும் இவர்களுடன் சேர்ந்து உயிர் விட்ட நம் குல வீரர்கள் மற்றும் நம் குல மக்கள் பல இலட்சம் பேர். முக்குலத்தோர் மட்டுமே இறுதிவரை யாருக்கும் அடங்காமல் வீரத்தோடு வாழ்ந்தவர்கள்.
.
.
.
* சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் :
மூன்றாம் தமிழ் சங்கம் - பாண்டித்துரைத்தேவர்
குடந்தை தமிழ் சங்கம் - இரகுநாத இராசாளியார்
.
.
.
* மேலும் முக்குலத்தோர் பெருமைகளாக இன்றும் விளங்குபவை :
1) சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் நாடு என்ற அமைப்பை உருவாக்கி வாழ்பவர்கள் முக்குலத்தோர் மட்டுமே
2) சோழ, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளில் காணப்படும் அனைத்து பட்டங்களையும் மற்றும் 2000 கும் மேலான சிறப்பு பட்டங்களை இன்றும் பயன்படுத்தி வருபவர்கள்.
3) கடந்த நூற்றாண்டு முன்பு வரை போர் தொழில் மட்டும் செய்தவர்கள்
4) தமிழனின் பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் ஏறு தழுவுதல் இன்றும் தன் வாழும் பகுதிகளில் நடத்தி வருபவர்கள்.
5) வளரி என்ற பழமையான ஆயுதத்தை கடந்த நூற்றாண்டு முன்பு வரை பயன்படுத்தியவர்கள் முக்குலத்தோர் மட்டுமே.
6) சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் குடும்ப பெண்கள் அழைக்கப்பட்ட நாச்சியார் என்பதை இன்றும் பயன்படுத்தி வருபவர்கள் முக்குலத்தோர் மட்டுமே.
இந்த வீர வரலாறு கடந்த 700 வருடங்களாக வேறு எவனுக்கு எந்த தமிழ் சாதிக்கு இருக்கு. இதுல நாங்க மன்னர் என்று பொய் சொன்னமாம். எங்களுக்கு இந்த மன்னர் அந்த மன்னரது புள்ள நானும் நானும் என்று அழைய வேண்டிய நிலைமை எங்களுக்கு இல்லை. வலையர் முத்தரையர் என்றும், பள்ளி வன்னியர் என்றும், சாணான் நாடார் என்றும், பள்ளன் தேவேந்திர அல்லது மள்ளர் என்று பேர மாத்திக்க முடியும். ஆனால் கள்ளர் எப்பவும் கள்ளர் தான 2000 வருடங்களுக்கு மேலாக
முத்தரையர்க்கு வரலாறு இல்லை
என்று நினைக்க வேண்டாம்
கீழேயுள்ள
கட்டுரையை
படிக்கவும்
http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=188333
முத்தரையர்க்கு வரலாறு இல்லை என்று நினைக்க வேண்டாம் கீழேயுள்ள கட்டுரையை படிக்கவும் http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=188333
1100 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செழிக்க குமிழி அமைத்துக்கொடுத்த தமிழன் இரண சிங்க முத்தரையன்-நொடியூர் மருதன் ஏரியில் கல்வெட்டு கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள நொடியூர் கிராமத்தில் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு
புதிய கல்வெட்டுச்செய்தியும் ஆண்டும் “ஷஸ்வத்தி ஸ்ரீ கோவி ராஜகேசரி பன்மர்க்குயாண்டு (பத்தா)வது கீழ்செங்கிளி நாட்டு மங்கலத்து. விலக்க ஏரன் இரணசிங்க முத்தரையன் சேவித்த குமிழி “ கோவி ராஜகேசரி என்றழைக்கப்பட்ட ஆதித்தனின் பத்தாவது ஆட்சியாண்டில் கீழ்செங்கிளி நாட்டை சேர்ந்த மங்கலத்து விலக்க ஏரன் இரண சிங்க முத்தரையன் என்பவர் இந்த குமிழியை அமைத்து கொடுத்ததாக இக்கல்வெட்டில் தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.இக்கல்வெட்டின் எழுத்தமைதி மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதித்த சோழரின் கல்வெட்டு களோடு ஒப்புநோக்கும் போது இது 1100 ஆண்டுகள் பழமையானது என்பதை அறிய முடிகிறது .
குமிழி அமைத்தலும் ஏரியும் :ஏரிகளில் இருந்து பாசனத்துக்கு நீரை வெளியேற்ற அன்றே சிறந்த முறையில் மதகுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மதகுகளுக்கு பல பெயர்கள் இடப்பட்டிருந்தன. சுருங்கைஇ புதவுஇ மதகுஇ குமிழிஇ தூம்புஇ புலிக்கண்மடைஇ மடை முதலியன அப்பெயர்கள். தற்காலத் திருகு அடைப்பான் போன்று நீர் வெளியேரும் அளவை சிறுகச் சிறுக குறைக்கவோ அதிகரிக்கவோ கூடிய குமிழிகளும் அன்றே இருந்தன.தமிழகத்தின் பல பகுதிகள் வடகிழக்குப் பருவக்காற்றால் வருடத்திற்கு இரண்டு மாதங்கள் ராஜகேசரி ஆதித்தனும் இரணசிங்க முத்தரையனும்
ஸ்ரீ கோவி ராஜகேசரி என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்களான ஆதித்தன் இ கண்டராதித்தன் இ இராஜராஜன் ஆகியோரில் ஆதித்தன் பல்லவர் களான நிருபத்துங்கன் இ மகன் அபராசிதன் இ பாட்டன் பிருதிவீபதி யுடன் போர் உறவுகொண்டு பாண்டியன் இரண்டாம் வரகுணன் என்பானை திருப்புறம்பியம்(கும்பகோணம் அருகே) எனுமிடத்தில் தோற்கடித்ததாக சான்றுகள் பகிரப்படும் நிலையில்இ இப்போரில் பிருதிவீபதி இறந்த போதும் பல்லவர்களுக்கு வெற்றிகிடைக்க ஆதித்தன் காரணமாக அமைந்தான். இதன் பின்னர் கி.பி.882 ல் நிருபதுங்கன் இறந்தவுடன் ஆதித்தன் செங்கற்பட்டு வரை தனது எல்லையை விரிவாக்கம் செய்ததோடு அதே காலக்கட்டத்தில் பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியாளர்களான முத்தரையர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு அவர்களை தமது நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்திக்கொண்டதை இரண சிங்க முத்தரையன் இந்த ஏரியை உருவாக்கி குமிழி அமைத்திருக்கும் இக்கல்வெட்டு முத்தரையர் மற்றும் ஆதித்தனிடையே இருந்த உறவுக்கு வரலாற்று சான்றாக அமைகிறது.
ஏரன் விலக்கன் இரணசிங்க முத்தரையன் யார்? பெரம்பலூர் மாவட்டம்இஉடையார் பாளையம் வட்டம்இசெட்டித் திருக்கோணம் இரணேஸ்வரர் கோயிலின் கருவறை முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டில் கங்கை நாடாழ்வாந் சேதநன் பட...கக்கு வைசத பகை திருந்த வேண்டுமென்று எல்லாரு சொல்ல சம்மதித்து திருக்குற்றத்து மாதேவர் “இரணசிங்க ஈஸ்வரமுடையாருக்கு” விளக்கு முப்பத்திரண்டும் சீராளந் துறந்த என்று செய்தி பகிரப்படுவதன் மூலம் இப்பெயர் கொண்ட ஆட்சியாளர் ஒருவர் இருந்திருப்பதும் அவரது இயற்பெயரான இரணசிங்கன் என்ற அடைமொழியுடன் இறைவன் அழைக்கப்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது. பல்லவர்களில் புகழ் பெற்றவர்கள் சிங்க என்ற பெயர்ச்சொல்லுடன் பெயர் சூட்டிக்கொள்வதை அறிகிறோம் அதன் வழியில் இரண சிங்க முத்தரையன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என யூகிக்க வேண்டியுள்ளது . இப்பெயருடன் ஏரன் விலக்கன் என்கிற அடைமொழியோடு அழைத்துக்கொண்டதன் மூலம் அவன் தன்னை ஒரு உழவன் என்பதில் பெருமை கொண்டு உழுபணிக்கு உதவியாக இருக்கும் ஏர் என்கிற கருவியின் பெயர்ச்சொல்லை அடிப்படையாகக்கொண்டு அப்பணியை செய்கிறவன் அதன் தலைவன் என்கிற வகையில் தம்மை ஏரன் என்று அழைத்திருக்க வேண்டும் என்று கருதலாம். அது மட்டுமின்றி இலங்கையுடனான முத்தரையர்களின் தொடர்பு பற்றியும் மதத்துடனான தொடர்பு பற்றியும் புதிய ஆய்வுகளுக்கு இந்தபெயர் வழிவகுக்கும் என நம்பமுடிகிறது என்பதோடு .இந்தக்குமிழிகல்வெட்டு பழங்கால பாசன முறைக்கு சான்றாக அமைந்திருப்பதாகவும் கந்தர்வகோட்டை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் மூத்தக்கல்வெட்டு என்றும் கூறினார்.
நண்பரே! கல்வெட்டு முத்தரையர் என உள்ளதே தவிர வலையர் என்றில்லையே? குண்டைய முத்தரையர் என மறவர் ஒருவரும் பட்டங்கொண்டாரே. ஸ்ரீகள்வர்கள்வன் முத்தரையர், ஸ்ரீமுதுராஜா கள்வர் என கள்ளர் மறவருக்கும் கல்வெட்டு உள்ளதே?.. தாணான்மை நாட்டு சேந்தன்குடி வழுவாட்டித்தேவர் ஜமீன்கள் தங்களைப்பற்றி பத்து புத்தகங்கள் எழுதியுள்ளனர். எல்லாவற்றிலும் தங்களை கள்ளருடன் சம்பந்தம் செய்த மறவர்கள் என்றுதானே சொல்கிறார்கள்? .. ஆக முத்தரையர் என்பது ஒரு பட்டம் எனக்கொள்வதே சிறந்தது ஆகும்.
முக்குலத்து மங்கைகளுக்கு நாச்சியார் என்பது மட்டும் பட்டமல்ல! ... ஆயியார், ராஜாயீ, ராணியார், தேவியார், என பல பட்டங்களை கொண்டவர்கள். தென்மாவட்டங்களில் நாச்சியார் ,ஆச்சியார் எனவும் மத்திய, தஞ்சை ,புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் பிறபட்டங்களையும் கொள்கிறார்கள். பாலவநத்தம்,அத்திவெட்டி,கோனூர், சேந்தன்குடி ராணியார்கள் ஆயியார் பட்டமுடையவர்கள் ஆவர்.
முக்குலத்து மங்கைகளுக்கு நாச்சியார் என்பது மட்டும் பட்டமல்ல! ... ஆயியார், ராஜாயீ, ராணியார், தேவியார், என பல பட்டங்களை கொண்டவர்கள். தென்மாவட்டங்களில் நாச்சியார் ,ஆச்சியார் எனவும் மத்திய, தஞ்சை ,புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் பிறபட்டங்களையும் கொள்கிறார்கள். பாலவநத்தம்,அத்திவெட்டி,கோனூர், சேந்தன்குடி ராணியார்கள் ஆயியார் பட்டமுடையவர்கள் ஆவர்.
mr. முனிராஜ் வாணாதிராயர் please read following.
Mutturaiyar not kalabhras muttraiyar king Suvaran Maran's title kalvar kalvan (ஸ்ரீகள்வர்கள்வன்) denote his triumph over the Kalabhras. refer the book History of Tamil Nadu|publisher=Dave - Beryl Publications|location=The Identity of the Kalabhras. so it is clear he is not a Kallar. Don't spread untruth information.
முனிராஜ் வாணாதிராயர்
please see following posts.
http://paalai-tribes.blogspot.qa/2013/11/blog-post_14.html
http://paalai-tribes.blogspot.qa/2013/11/blog-post_5766.html
http://paalai-tribes.blogspot.qa/2013/11/1843.html
எனக்கு தெரிந்து முத்தரைய மன்னர்கள் தான் மிக மூத்த குடி மன்னனாக இருந்திருக்க வேண்டும்.சோழர் காலத்தில் மன்னர்கள் வீழ்த்தாலும் மக்கள் வாழ்த்திருப்பர்.இலங்கை படையெடுப்பின் போது வழியில் புதுக்கோட்டை தோண்டி ராமேஸ்வரம் போன்ற கடலோர பகுதிகளில் தங்கியிருக்கலாம்.கவனிக்க முத்தரையர் இனம் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி கடலோரங்களில் அதிகம் இல்லை.தஞ்சை முதல் இலங்கை வரை உள்ள கடலோர பகுதிகக்ளில் தான் அதிகம். வளரி எறிந்த வளையர் வலையர்களாக மாறியிருக்கலாம் .ஆனால் நிச்சியம் முத்தரயர்களும் கள்ளர்களும் கிளை குடிகள் தான்.ஒரு ஆண்ட வம்சம் கீழ் குடிகளாக இருக்க வாய்ப்பு இல்லை.
வழுவாடி வலையர் மறவர் இனம் மறவர் என்பது பட்டம்மே தவிர சாதியில்லை
கருத்துரையிடுக