செவ்வாய், 23 மே, 2017

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா

தமிழக அரசு சார்பில் விழா எடுக்கப்படும் எல்லா தலைவர்களின் பிறந்தநாள் அன்றும் அரசு சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்படுவது வழக்கம் எமது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரை தவிர...!
இதற்க்கு என்ன காரணமாக இருக்கும் ? ஒருவேளை விளம்பரம் கொடுக்க காசு இல்லாமல் இருப்பாரோ தமிழக முதலமைச்சர் ?
என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் முடிந்தால் தமிழக முதலமைச்சர் பெயரில் ஒரு ரூபாய்க்கு மணியார்டரோ,DD-யோ, அல்லது செக்கில் எழுதியோ தமிழக அரசுக்கு ஒவ்வொரு முத்தரையரும் அனுப்பி அனுப்பிய நகலோடு இந்த தொகையை எதிர்காலத்தில் முத்தரையர் பிறந்தநாள் அன்று தினசரிகளின் விளம்பரம் கொடுக்க வைத்துக்கொள்ளும்படியும், ஒவ்வொரு ஆண்டும் இதுபோல ஒரு ரூபாய் அனுப்பிவிடுவதாகவும் கடிதமும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். =D
கா.சஞ்சய்காந்தி அம்பலகாரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக