மட்டற்ற மகிழ்ச்சி...!!
=D

நேற்றைய தினம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பாகமாக பல்வேறு கிராமங்களின் ஊடாக பயணப்பட நேர்ந்தது. உண்மையிலேயே மிகப்பெரிய சந்தோசமான ஒரு நாளாக நேற்றைய தினம் அமைந்துவிட்டது.
முத்தரையர் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும் இரவெல்லாம் கண்விழித்து காளையர்கள் கொடி, தோரணம், பதாகைகள் வைத்து அலங்கரித்து இருந்ததை காண முடிந்தது.... இன்னும் சொல்லப்போனால் தெருவெங்கும் திருவிழாவாக இருந்தது, தெருவில் கொண்டாடும் இந்த விழாவினை இன்னும் அனைத்து வீடுகளுக்குள்ளும் கொண்டு சேர்க்க வேண்டும்.
நிச்சயமாக நம்முடைய கிராமத்து இளம் சிங்கங்களுக்கு பெரும் அரசியலின் தாக்கம் எதுவுமே இல்லை, அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளோ, முரண்பாடுகளோ இல்லை என்பதற்க்கு உதாரணம் சமூக அமைப்புகளின் பரம வைரிகள் என்று சொல்லப்படும் அய்யா ஆர்.வியும், கே.கே.செல்வகுமாரும் ஒரே பதாகைகளில் சிரித்துக்கொண்டே நிற்கிறார்கள், (இடையிடையே சில பதாகைகளில் நானும்கூட
:) )

திருச்சி மாநகர காவல்துறையினருக்கு நம் பேரரசர் மீது இவ்வளவு மரியாதை இருக்குமென்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை நான் கூட தூங்கி எழுந்து ஒன்பது மணிக்குதான் பேரரசரின் சிலைக்கு அருகே சென்று ஆசிப்பெற்றேன், ஆனால் திருச்சி மாநகர காவல்துறையோ முதல்நாள் இரவிலிருந்தே காத்திருந்து பேரரசரை வணங்கி இருப்பார்கள் போல...
:pஆயிரக்கணக்கில் காவல்துறை குவிக்கப்பட்டு முத்தரையர் இளைஞர்கள் அணிதிரண்டு வருவார்களா ? என்று இங்கே திருச்சியில் காத்திருந்த அந்த நேரத்தில் கிராமத்தின் தெருக்களின் எம் பேரரசரின் பிறந்தநாள் எத்தனையோ உற்சாகமாக கொண்டாடப்பட்டுக்கொன்டு இருந்தது..

இன்னும் பாஜக, நாம் தமிழர் போன்ற அமைப்புகள் அவர்கள் விழாவாகவே இதனை நடத்தியதும், அனைத்து அரசியல் அமைப்பினரும் வருகை தந்து சிறப்பித்ததும் மட்டற்ற மகிழ்ச்சியே...!
வழக்கம்போலவே எதாவது ஒரு குறையை சுட்டிக்காட்டுவேன் என்று இவ்வளவு தூரம் வாசித்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்
:P

#குறையொன்றுமில்லை....
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக