மிக சமீபத்தில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவரை சந்தித்தபோது இயல்பாகவே பேசிக்கொண்டு இருந்தோம், ஒரு கட்டத்தில் என்னுடைய பெயரை சொல்லும் அவசியம் உண்டானது, "ஓ நீங்களா ? கேள்விபட்டிருக்கேன் இப்பதான் சந்திக்கிறேன்" என்று உற்சாகமாக பேச துவங்கியவர் "சமுதாய பணிகள் எல்லாம் எப்படி போய்கொண்டு இருக்கிறது" என்ற வினாவினை தொடுத்தார். உண்மையில் அவரின் பரபரபான வாழ்க்கைக்கிடையே என்னை அல்லது எனது பெயரை நினைவில் வைத்துக்கொள்வதென்பதே பெரியவிசயம் இதில் நான் சமுதாய பணிகள் செய்வதுவரை அவர் வினா தொடுத்தபோது சற்று அதிர்ச்சிதான் அடைந்தேன். இருந்தும் சமாளித்து "ஏதோ என்னாலானதை செய்கிறேன், ............." என்று எதையோ சொல்லி சமாளித்தேன். கற்றறிந்த அவரே கடைசியாக இப்படி சொல்லி முடித்தார், "நீங்க என்னதான் சாதி அரசியல் பேசினாலும் அவ்வளவு எளிதாக நம் மக்கள் புரிந்துக்கொள்ள மாட்டார்கள்"
அவரின் கூற்று உண்மைதானே...??
நான் மேலே குறிபிட்ட பெரும்பாலான அரசு துறை அதிகாரிகளும் தங்களை ஒருவேளை பொதுவெளியில் அடையாளம் காட்டிக்கொண்டால் அவர்களுக்கு வினையே இங்கிருந்துதான் என்பதை மிக நன்றாக உணர்ந்து பணியாற்றுகிறார்கள்.
அப்படிதான் கற்றவர்கள் பெரும்பாலும் விலகியே நிற்க இங்கே "ஆகாததுகள்" பலதும் அரசியல் செய்து சமுதாய சக்திகளை வீணடித்துக்கொண்டு இருக்கிறது. அரசு துறையில் உயர்பொருப்பில் இருப்பவர்கள் நேரடி சமூகப்பணி என்பது நிச்சயம் சாத்தியமில்லை, அதே நேரம் அவர்களின் படிப்பறிவும், பட்டறிவும் மட்டுமே சமூக வளர்ச்சிக்கு உதவும். இங்கு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சமூகத்தின் அரசு பணியாளர்கள் அத்தனை பேரும் தங்கள் ஊதியத்தில் 10 முதல் 15 சதவீதத்தை ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு சமுதாய பணிக்காக செலவிடுகிறார்கள், இன்னுமொரு சாதியை சேர்ந்த அரசு பணியாளர்கள் அதாவது தலைமை செயலாளர் முதல் தலையாரிவரை அத்தனை அரசு ஊழியர்களையும் கொண்ட ஒரு ரகசிய அமைப்பினை பலப்படுத்தி வைத்துக்கொண்டு அந்த சாதிக்கு எதிரான எந்த விசயத்தையும் நடத்த முடியாதபடிக்கு மிகவும் நுணுக்கமாக செயல்படுகிறார்கள், அவர்களுக்கு பாதகமாக மட்டுமல்ல, அவர்களுக்கு இல்லாமல் எவனுக்கும் எதுவும் கிடைக்க முடியாத அளவுக்கு மிக சாதூர்யமாக செயல்படுகிறார்கள்.
இப்படியான ஒரு திட்டமிடுதலையோ, அல்லது இதிலிருந்து வேறுபட்டு புதுமையான வழிமுறையோ என்றைக்கு அரசுதுறை முத்தரையர்கள் கையாள்கிறார்களோ அன்றிலிருந்துதான் "முத்தரையர்" சமுதாயத்தின் வளர்ச்சி என்பதே துவங்கும், அதுவரை கிணற்றுதவளையென காச்மூச் மட்டும்தான் கேட்கும், வேலைக்கு ஒன்றும் ஆகாது.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக