முரண்பாடுகளின் மொத்த உருவமா தமிழக அரசு நிர்வாகம் ?
நேற்று தஞ்சாவூரில் தமிழக அரசின் ஏற்பாட்டில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்படி குறிப்பிடுகிறார்
// எட்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட தனஞ்சய முத்தரையரின் பெயரையே தன் பெயராக கொண்டு உருவானது தஞ்சை என்றும், தனஞ்சயன் ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என மாறியது என்றும் கூறப்படுகிறது.//
இதே கருத்துதான் செல்வி.ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தஞ்சையில் கூட்டிய "எட்டாவது உலக தமிழ் மாநாட்டு மலரிலும்" இடம் பெற்று இருக்கிறது.
ஆனால் தஞ்சை மாவட்ட அரசின் அதிகாரபூர்வ இணையதளம் (http://www.thanjavur.tn.nic.in/history.html) மட்டும் கற்பனையான அரக்கன் கதையை அளந்துக்கொண்டு இருக்கிறது, இது தொடர்பாக பலமுறை நேரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இன்றைய தேதிவரை எந்த மாற்றமும் அந்த இணையதளத்தில் செய்யப்படவில்லை....
ஆக தமிழக அரசின் தலைமைப்பொருப்பில் இருப்பவர்கள் சொல்வது ஒன்றாகவும் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மாவட்ட நிர்வாகம் சொல்லும் வரலாறு ஒன்றாகவும் இஒருக்கிறது இதுதான் தமிழக அரசின் லட்சணம் என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக