நேரமில்லை என்றாலும் பரவாயில்லை ஓரிரு நிமிடங்கள் ஒதுக்கி இதனை வாசித்துவிடுங்கள் உங்கள் வம்சம் வாழ்வாங்கு வாழ....!
கிட்டதட்ட நூற்றுக்கணக்கான மேடைகளில், ஆயிரக்கணக்கான எழுத்துக்களில் எதையெதையோ எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு எளிதாக நிதர்சனத்தை பட்டவர்த்தனமாக எழுத என்னால் முடியவில்லை என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொள்கிறேன்..
இதனை எழுதியவர் யாரென்று தெரியவில்லை (தெரிந்தவுடன் சொல்கிறேன்), ஆனால் ஒவ்வொரு எழுத்தும் சத்தியம் நிறைந்தவை, எல்லா எழுத்துக்களையும் பொருமையாக உள்வாங்கி படியுங்கள் நிதர்சனம் புரியும்...
நீங்கள் வாசிப்பதோடு மட்டுமல்லாமல் பிற முத்தரையரையும் வாசிக்க செய்துவிட்டால் ஏழேழு ஜென்மங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
--------------------------------------------------------------------
தமிழகத்தில் குறிப்பாக திருச்சி, புதுகோட்டை, தஞ்சை, மதுரை, ராமநாதபுரம், கரூர், பெரம்பலூர், சிவகங்கை, போன்ற மாவட்டங்களில் ஒருவன் தடுக்கி விழுந்தால் முத்தரையர் காலில் தான் விழ வேண்டும்! அவ்வளவு பேர் இருக்கிறார்கள்! ஆனால் என்ன பிரயோஜனம்...?
முகநூலில் மட்டும் இன உணர்வு கொப்பளிக்கும் முத்தரையர்கள் நிஜ வாழ்க்கையில் தாங்க முடியாத அளவுக்கு இடைஞ்சல் செய்வதும், கெடுதல் செய்வதும் முத்தரையருக்கு மட்டும் தான்!
எந்த விதத்திலும் ஒரு முத்தரையன் இன்னொரு முத்தரையனுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை! உபத்திரவம் செய்ய மாட்டேன் என்று சொல்லி உறுதி எடுத்து கொள்ள முடியுமா? முன்னேறும்
உறவுக்காரர்களை பார்த்து பொறாமை பட மாட்டேன்! காலை தட்டி விட மாட்டேன் என்று சொல்லி சபதம் செய்து அதை கடைபிடிக்க முடியுமா?
முத்தரையர்க்கு எம்.எல்.ஏ, மந்திரி கிடைத்து விட்டால் போதுமா இனம் முன்னேறி விடுமா? அவன் ஊழல் செய்து, ஊரை அடித்து வீடு கட்டி அவன் வீட்டு காம்பௌண்டு சுவரை கூட நம்மை தொடவிட மாட்டான்!
உலகமே அழிந்தாலும் முத்தரையர் ஒன்று சேர்ந்து வர போவதில்லை! அப்படி வந்தாலும் அதில் எந்த ஒரு நன்மையும் இல்லை! இதை நான் நொந்து போய் சொல்லுகிறேன்! தயவு செய்து தீர்க்கமாக சிந்திக்க பழக வேண்டும்!
யார் முன்னேறினாலும் மகிழ்ச்சி அடையும் முத்தரையர் தன் சொந்த ரத்த அண்ணன் தம்பி, பங்காளிகள் முன்னேறினால் கடும் அதிர்ச்சியும், வெறுப்பும் அடைகிறார்கள்!
முத்தரையர் நிலை இந்த அளவுக்கு கீழ் நோக்கி செல்ல முத்தரையர் மட்டும் தான் காரணம்!நமது பலவீனங்களை மற்றவர்கள் பலமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்!
குடிப்பதை நிறுத்து! படிப்பதை நிறுத்தாதே!அளவான செலவில் குடும்பத்தை நடத்து!
இன்னறைக்கு உள்ள சூழ்நிலையில் முத்தரையர் இளைஞர்களுக்கு இந்த அளவு இனப்பற்று இருப்பது உண்மையிலே பாராட்டுக்குரியது!நெகிழ்ச்சிக்குரியது!
ஆனால் நம் மக்கள் நல்லவர்கள் ஆக இருந்தாலும் கூட ஈகோ மிகமிக அதிகமாக இருப்பதால் ஒருவருக்கு ஒருவர் போட்டி, பொறாமையில் அடித்து கொள்கிறார்கள்!
ஒரு குடும்பத்திற்குள், தெருவுக்குள், ஊருக்குள் கூட ஒற்றுமையாக இருந்து நான் பார்த்தது இல்லை!
ஒரு சாதி நிம்மதியாக வாழ அரசியல் பதவியோ, சாதி சங்கமோ, ஏன் ஒற்றுமையோ கூட தேவை இல்லை! அங்காளி, பங்காளி துரோகம் இல்லாமல், அப்படியே அவன் நம்மை கெடுத்தாலும், நாம் அவனை கெடுக்காமல் போறான் போ! என்று சொல்லி விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்!
குடும்பம் ஒற்றுமை ஆக இருக்கும்! குடும்பம் ஒற்றுமை ஆக இருந்தால் தன்னிச்சையாக, தானாக சாதி ஒற்றுமை உண்டாகி விடும்!
நாம் அனைவரும் கொஞ்சம் கூட சரியில்லை என்பதை புரிந்து, உணர்ந்து உறவுக்காரர்களை பார்த்து, அவர்கள் வாழ்வை பார்த்து பொறாமையில் புழுங்காமல், அவர்கள் நம்மை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை!
நாம் அவர்களை மதித்து அவர்கள் வளர்ச்சிக்கு வழி விட்டு விலகி நின்றால் போதும்! இனம் முன்னேறிவிடும்!
விட்டுக்கொடுக்கும் தன்மை கொஞ்சமும் இல்லாததால் மட்டுமே முத்தரையர் இனம் மொத்தமாக மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்க, வேடிக்கை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது!
ஒரு முத்தரையரால் இன்னொரு முத்தரையர் முன்னுக்கு வருவார் என்கிற நிலை நடைமுறையில் யதார்த்தத்தில் இல்லை! அப்படி யாரையுமே நான் பார்த்தது இல்லை!
இந்த காலத்தில் எல்லோருமே சாதி வெறியோடு, ஒற்றுமையோடு இருக்கும் போது நாமும் ஒன்றுபட நினைப்பது தவறு இல்லை! ஆனால் நம்மிடம் பிகினிங் நன்றாக இருக்கிறது!பினிஷிங் சரியில்லை!
வீட்டை சுத்தம் செய்தால் நாடு முழுவதும் சுத்தம் ஆகும்! முத்தரையர் குடும்பம் ஒற்றுமையாக இருந்தாலே, அளவாக பேசினாலே சாதி ஒற்றுமை ஏற்பட்டு விடும்!
நல்லவர்கள் ஒருபோதும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருப்பதில்லை! என்பதற்கு நாமே நல்ல உதாரணம் ஆக இருக்கிறோம்!
அதனால் தான் எந்த ஒரு இடத்திலும் நம்மை மதிக்க, உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க மாட்டேன் என்கிறது!
இந்த நிலை மாறியே தீர வேண்டும்!
முத்தரையர்கள் பணக்காரர் ஆக இருக்கிறார்களோ இல்லையோ ஒருத்தர் கூட ஏழைகளாக இருக்க கூடாது!
பிற இனத்தவரிடம் வலை தளங்களில் வெட்டி வம்பு இழுக்க கூடாது! ஒற்றுமை இல்லாத இனத்திற்கு ஊர் வம்பு ஒரு கேடா?பிறரை இழிவாக பேசுவதன் மூலம் எந்த வகையிலும் நாம் உயர்வடைய மாட்டோம்! மாறாக வெட்டி பகை தான் வளரும்!
உன் இலையை பார்! உன் நிலையை எண்ணிப்பார்!
எப்போது பார்த்தாலும் அடுத்தவன் இலையையே பார்த்து கொண்டு இருக்காதே!
நீ முதலில் உன் குடும்பத்தை முன்னேற்று! காதல் திருமணம், கலப்பு திருமணத்தை உன் குடும்பத்தில் தடுத்து நிறுத்து!
பிறகு இனம் தானாக உருப்படும்! அங்காளி, பங்காளிக்கு இருந்தால் கொடு இல்லாவிடில் விடு! ஆனால் கெடுக்க வேண்டாம்!
குடிக்காமல், மனைவி மக்களை அடிக்காமல் உழைத்து குடும்பத்தை உயர்த்தும் உண்மையான குடும்ப பற்று தான் உண்மையான இனப்பற்று! நம் இனம் தாழ்ந்து விட கூடாது! அதற்கு நீ வீழ்ந்து விட கூடாது!படி! முன்னேறு!
நேர்மையாய்,
எளிமையாய் வாழ்ந்து நல்ல நிலைக்கு வா!
நன்றி
(எனக்கு அனுப்பியவர் இராசிங்காடு குமார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக