அதிமுக முன்னாள் அமைச்சர் கொலையில்
முக்கிய குற்றவாளி சரண்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாச்சலம் கடந்த வியாழன் இரவு அன்று 8.30மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதனால் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பேருந்துகளும் 5வது நாளாக இயங்கவில்லை. இன்றோடு ஐந்தாவது நாளாக பேருந்துகள் இயங்காததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்நிலையில் இன்று வெங்கடாசலம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பேராவூரணியைச்சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கணேசன் என்பவர் மதுரை மதுரை ஜெ.எம். 2 கோர்ட்டில் கணேசன் சரணடைந்தார். அவரை 25.10.2010 வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.
சரணடைந்த கணேசன் கார் புரோக்கராக இருந்துவந்தார். இவர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. பஞ்சாயத்து தகராறில் வெங்கடாசலத்தை கணேசனும் அவனது கூட்டாளிகளும் வெட்டிக்கொன்றனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெங்கடாசலம் கொலையில் கணேசன் சரணடைந்துவிட்டதால் மற்ற குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனால் இன்னும் பதட்டம் நீடிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக