வியாழன், 21 அக்டோபர், 2010

முன்னாள் அமைச்சர் கொலை வழக்கு: சி.பி.ஐ விசாரணைக்கு கோரிக்கை - நக்கீரன்

முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் படுகொலை தொடர்பான வழக்கில், தமிழக அரசு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, முத்தரையர் புனரமைப்புக் கழகத்தின் நிறுவனர் தனுஷ்கோடி கோரிக்கை விடுத்துள்ளார்.



இதுகுறித்து முத்தரையர் புனரமைப்புக் கழகத்தின் நிறுவனர் தனுஷ்கோடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,



புதுக்கோட்டை முத்தரையர் மக்களின் பாதுகாவலரும், அனைத்து சமூக மக்களின் அன்பைப் பெற்றவரும், இரண்டு முறை ஆலங்குடி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்றவரும், தான் இருந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அந்த கட்சியை எதிர்த்து களம் கண்டு சுயேட்சையாக வெற்றிபெற்ற தமிழக முன்னாள் அமைச்சருமான ஆலங்குடி வெங்கடாசலம் படுகொலையின் பின்னனியில், அ.தி.மு.க.வில் உள்ள ஆதிக்க ஜாதியைச் சார்ந்த அதிமுக்கிய புள்ளிகளின் பெயர்களும் அடிபடுவதால், அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருப்பதை முத்தரையர் புனரமைப்புக் கழகம் மிக வன்மையாக கண்டிக்கிறது. எனவே தமிழக அரசு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முத்தரையர் புனரமைப்புக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று தனுஷ்கோடி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக