நத்தம்:நத்தம் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட, வரும் 25ம் தேதிக்குள் சீட் வழங்காவிட்டால், முத்தரையர் சங்கம் சார்பில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக, தி.மு.க.,வை சேர்ந்த ஆண்டியம்பலம் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் விஜயன், கடந்த முறை இத்தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்த ஆண்டியம்பலம் மனு செய்திருந்தனர்.விஜயனுக்கு சீட் வழங்கப்பட்டதால், கோபமடைந்த முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த சிலர், ஆண்டியம்பலத்திற்கு சீட் கேட்டு தி.மு.க., தலைமைக்கு தந்தி அனுப்பினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த முத்தரையர் சங்க கூட்டத்தில் ஆண்டியம்பலம் பேசியதாவது:நத்தம் தொகுதியில் முத்தரையர் சமுதாய மக்கள் அதிகளவில் உள்ளனர். எனது தந்தையான மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டியம்பலத்தான் காலத்திலிருந்து ஆதரவு தந்து வருகிறீர்கள். கடந்த தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற எனக்கு, மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை. வரும் 25ம் தேதிக்குள் தி.மு.க., தலைமை மறுபரிசீலனை செய்து, எனக்கு மீண்டும் சீட் வழங்கும் என எதிர்பார்க்கிறேன்.அப்படியில்லையெனில், 25ம் தேதி முத்தரையர் சமுதாயம் சார்பாக சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவேன்.இவ்வாறு ஆண்டியம்பலம் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக